வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா? சட்டம் சொல்வது என்ன?

வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா? சட்டம் சொல்வது என்ன?
வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா? சட்டம் சொல்வது என்ன?

வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்... இப்போதெல்லாம் அடிக்கடி இந்த செய்தியை பார்த்து வருகிறோம். வாளை வைத்து கேக் வெட்டும் இதுபோன்ற கலாசாரம் சென்னை போன்ற பெருநகரங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தென் தமிழகத்தில் இதே போன்று வாளால் கேக் வெட்டி கொண்டாடும் கலாசாரம் அதிக அளவில் பரவி வருகிறது. இப்படி கேக் வெட்டிக் கொண்டாடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதையும் பார்த்து வருகிறோம்.

வாளால் கேக் வெட்டுவது குற்றமா? எந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்? எதற்காக வாளை பயன்படுத்தலாம் அல்லது வைத்திருந்தாலே குற்றமா? என்பது பற்றி வழக்கறிஞரான ராஜநந்தினியிடம் கேட்டோம்.

‘’பிறந்தநாள் போன்ற முக்கியமான நாட்களில் கேக் வெட்டுவது தவறில்லை. ஆனால் தற்போது பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு அரிவாள், பட்டா கத்தி போன்ற கொடும் ஆயுதங்களை வைத்து கேக் வெட்டுவது டிரெண்டாகி வருகிறது.

இங்கு தான் சிக்கல் ஆரம்பமாகிறது. ஆயுதச் சட்டம் 1959 பிரிவு 25(1)(a)ன் படி கொடும் ஆயுதங்கள் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகிறது. மேலும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147 (கலகம் விளைவித்தல்) மற்றும் பிரிவு 148 ன்படி (அபாயகரமான ஆயுதத்தை தாக்கி கலகம் விளைவித்தல்) போன்றவை தண்டனைக்கு உள்ளான குற்றங்கள் ஆகின்றன.

அதன்படி பிறந்தநாள் விழாவின் போது வழக்கத்திற்கு மாறாக பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டுபவர்கள் மேற்கண்ட பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படுகிறார்கள். இதற்கு மூன்றாண்டுகள் சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு’’ என்கிறார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com