ஐபிஎல் 2022: சாதிக்குமா இளம் படை? - டெல்லி கேபிடள்ஸ் அணியின் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

ஐபிஎல் 2022: சாதிக்குமா இளம் படை? - டெல்லி கேபிடள்ஸ் அணியின் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்
ஐபிஎல் 2022: சாதிக்குமா இளம் படை? - டெல்லி கேபிடள்ஸ் அணியின் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

ரிஷப் பண்ட் தலைமையில் வலுவான இளம் அணியை கட்டமைத்துள்ள டெல்லி கேபிடள்ஸ் இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா?

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்லாத டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த சீசனில் முதல்முறையாக கோப்பையை முத்தமிடும் முயற்சியில் களமிறங்க உள்ளது. 2012ஆம்  ஆண்டிற்கு பிறகு கடந்த 2019ல் ப்ளே ஆஃப் வரை முன்னேற்றியது. அதன்பின்னர் 2020ம் ஆண்டில் முதல் முறையாக அந்த அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. 2021ல் மீண்டும் ப்ளே ஆஃப் சுற்று வரை சென்று வெளியேறியது. எனவே இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்றே தீரவேண்டும் என்ற முயற்சியில், ஏலத்தில் மூத்த வீரர்களை ஓரங்கட்டிவிட்டு, அதிக அளவில் இளம் வீரர்களை இறக்கி, புதுப் பாய்ச்சலுடன் களம் காண காத்திருக்கும் டெல்லி அணியின் பலம், பலவீனம் இதோ..

இதையும் படிக்கலாம்: நெருங்கும் ஐபிஎல் 2022 : லக்னோ அணியின் பலம், பலவீனம் இதுதான் - ஒரு விரிவான அலசல்!

பலம்

டெல்லி கேபிடள்ஸ் அணியின் பேட்டிங்,  பவுலிங் இரண்டும் சம பலத்துடன் உள்ளது. மெகா ஏலத்திற்கு முன்பாக கேப்டன் ரிஷப் பண்ட், அக்ஸர் படேல், பிரித்வி ஷா மற்றும் அன்ரிக் நோர்க்யா ஆகிய 4 வீரர்களை தக்கவைத்தது. ஷிகர் தவானை கழட்டிவிட்டது அந்த அணிக்கு பின்னடைவு என்றாலும், அவரின் இடத்தை டேவிட் வார்னரை வைத்து நிரப்பியிருப்பது டெல்லி அணிக்கு பலம். ஐபிஎல் ஆட்டங்களைப் பொறுத்தவரை வார்னர் ஒரு ஜாம்பவான் வீரர். பல ஆண்டுகளாக தொடர்ந்து ரன்களை குவிக்கும் ஒரு வீரராக இருந்து வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 150 போட்டிகளில் விளையாடி 5,449 ரன்களை எடுத்து, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை கொண்டுள்ளார். எனவே டேவிட் வார்னரின் தேர்வு பேட்டிங் யூனிட்டை பலப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாம்: ஐபிஎல் 2022 : அறிமுக தொடரில் சோபிக்குமா குஜராத் டைட்டன்ஸ்? - ஓர் முழு அலசல்

மேலும் மெகா ஏலத்தில் மிட்செல் மார்ஷ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ரோவ்மன் பவல், டிம் சேஃபெர்ட், லுங்கி இங்கிடி ஆகிய வெளிநாட்டு வீரர்களையும், ஷர்துல் தாகூர், சர்ஃபராஸ் கான், குல்தீப் யாதவ், கமலேஷ் நாகர்கோடி, சேத்தன் சக்காரியா, மந்தீப் சிங், லலித் யாதவ், யஷ் துல், கலீல் அகமது ஆகிய இந்திய வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.

பிரித்வி ஷாவுடன் டேவிட் வார்னர் தொடக்க வீரராக இறங்குவார் எனத் தெரிகிறது. மிட்செல் மார்ஷ் 3ஆம் வரிசையிலும், கேப்டன் ரிஷப் பண்ட் 4ஆம் வரிசையிலும், சர்ஃபராஸ் கான் 5ஆம் வரிசையிலும் ஆடுவார்கள். இவர்கள் அனைவரும் அசத்தலான 'ஃபார்மில்' இருப்பது அணிக்கு உற்சாகமான செய்தி.

இதையும் படிக்கலாம்: ச்சறுத்தும் பேட்டிங்; வலுவான பவுலிங்; பயம் காட்டும் காயம் -இதுதான் SRH பலம், பலவீனம்

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கலீல் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சுழல் பந்துவீச்சில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் விக்கெட் வேட்டைக்கு உதவ காத்திருக்கின்றனர். தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங், உதவி பயிற்சியாளர்களாக ஷேன் வாட்சன், அஜித் அகார்கர் இருப்பது அணிக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. குறிப்பாக ஷேன் வாட்சனின் ஐபிஎல் அனுபவம் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு நிச்சயமாக பெரியளவில் உதவும்.

பலவீனம்:

திறமைகளின் அடிப்படையில் டெல்லி அணி பலமாக உள்ளது என்றாலும் தரத்தின் அடிப்படையில் பார்த்தால் கடந்த வருடம் இருந்த தரம் இப்போது இல்லை. ஷிகர் தவான், ஷ்ரேயஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிஸோ ரபாடா  போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை தக்க வைக்காத சூழ்நிலையில், அவர்களுக்குப் பதில் வாங்கப்பட்ட வீரர்கள் அந்த இடத்தை நிரப்புவார்களா என்பதில் நிச்சயமில்லை. மேலும் அணியில் ஒரு நல்ல ஃபினிஷர் இல்லாதது பலவீனமாக கருதப்படுகிறது. ஒருசில போட்டிகளில் ஏதேனும் ஒரு வீரர் அபாரமாக செயல்பட்டு தனி ஒருவராக வெற்றியைப் பெற்றுக் கொடுக்கலாமே தவிர, அனைத்து வீரர்களும் உறுதியாக வெற்றிகளைத் தேடி தருபவர்களாக இல்லை என்ற விமர்சனம் டெல்லி அணி மீது உள்ளது. இந்த விமர்சனத்தை தகர்த்து, ரிஷப் பண்ட் தலைமையிலான இளம் படை கோப்பையை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிக்கலாம்: ஐபிஎல் 2022: இந்த படை போதுமா? - வெற்றி வேட்கையுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் - முழு அலசல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com