9 முருகன்கள், 7 ராமச்சந்திரன்கள், 3 கருணாநிதிகள்... தேர்தல் களத்தின் சுவாரஸ்ய தகவல்கள்!

9 முருகன்கள், 7 ராமச்சந்திரன்கள், 3 கருணாநிதிகள்... தேர்தல் களத்தின் சுவாரஸ்ய தகவல்கள்!
9 முருகன்கள், 7 ராமச்சந்திரன்கள், 3 கருணாநிதிகள்... தேர்தல் களத்தின் சுவாரஸ்ய தகவல்கள்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலும் சரி, வேட்பாளர்களிலும் சரி பல்வேறு சுவாரஸ்ய தரவுகளை இம்முறை காணமுடிகிறது. அவற்றில் சில...

  • தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ பொறுத்தவரையில், அதிகபட்சமாக கரூரில் 77 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், பவானிசாகர் மற்றும் வால்பாறை தொகுதிகளில் குறைந்தபட்சமாக 6 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடும் தொகுதிகளாக இருக்கின்றன. இதுபோல் சில சுவாரஸ்ய தகவல்களைப் பார்ப்போம்.
  • சுயேச்சை வேட்பாளர் ஒருவர் கூட போட்டியிடாத தொகுதியாக பவானிசாகர் தொகுதி இருக்கிறது. இந்தத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த 13 பேரில், 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமிருந்த 8 பேரில் 2 பேர் தங்களது மனுக்களைத் திரும்பப்பெற்றனர். தற்போது களத்திலிருக்கும் 6 பேரும் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களே. இவர்களில் ஒருவர் கூட சுயேச்சை கிடையாது. சுயேச்சை வேட்பாளர் ஒருவர் கூட இல்லாத தொகுதியாக பவானிசாகர் தொகுதி இருக்கிறது.
  •  உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சிகள் தங்களது வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கின்றன. ஆனால், மக்கள் நீதி மய்யத்தில் அதன் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்துக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் அங்கீகாரக் கடிதம் கிடைக்காத நிலையில், தற்போது சுயேச்சை வேட்பாளராக, மக்கள் நீதி மையத்தின் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
  • வழக்கமாக ஒரு தொகுதியில் பிரலமான வேட்பாளரின், அதே பெயரில் வேறு ஒரு சுயேச்சை வேட்பாளரை களமிறக்கி, வாக்காளர்களைக் குழப்புவதும் நடக்கும். ஆனால், சில தொகுதிகளில் அது 3 பேர் வரை நீள்கிறது. கும்மிடிப்பூண்டி தொகுதியில் பாமகவுக்கு மாம்பழச் சின்னத்தில் பிரகாஷ் என்பவர் களமிறங்க, காலிபிளவர் சின்னத்திலும், திராட்சி சின்னத்திலும் இரு பிரகாஷ்கள் களமிறங்கியிருக்கிறார்கள். அதேபோல, ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவில் ராஜேஷ் என்பவர் போட்டியிட, அதே பெயரில் மேலும் இரு சுயேச்சைகளும் போட்டியிடுகிறார்கள்.
  • ராமச்சந்திரன் என்ற பெயரில் அதிமுகவில் 2 வேட்பாளர்கள், திமுகவில் 3 வேட்பாளர்கள், காங்கிரஸில் ஒருவர், அமமுகவில் ஒருவர் என 7 பேர் களமிறங்கியிருக்கிறார்கள். அதேபோல, கருணாநிதி என்ற பெயரில் திமுகவில் இருவரும், சமத்துவ மக்கள் கட்சியில் ஒருவரும் போட்டியிடுகின்றனர்.
  • முருகன் என்ற பெயரில் மட்டும் கட்சி வேட்பாளர்களாக 9 பேர் களமிறங்கியிருக்கிறார்கள். அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என அனைத்து கட்சி கூட்டணிகளிலும் முருகன் என்ற பெயரில் வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.

இப்படி பல்வேறு வகையான சுவாரஸ்யங்களால் இந்த சட்டப்பேரவைத் தேர்தல் களைகட்டியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com