ஜி.எஸ்.எல்.வி மாக் 3 ராக்கெட்...... இஸ்ரோவின் குண்டு பையன்

ஜி.எஸ்.எல்.வி மாக் 3 ராக்கெட்...... இஸ்ரோவின் குண்டு பையன்

ஜி.எஸ்.எல்.வி மாக் 3 ராக்கெட்...... இஸ்ரோவின் குண்டு பையன்
Published on

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஜிசாட்-19 செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி மாக் 3 ராக்கெட் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

மிகப்பெரிய தோற்றமுடையதால் குண்டு பையன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் 15 ஆண்டு கால இஸ்ரோவின் முயற்சியாகும். இந்த ராக்கெட்டில் திட, திரவ, கிரையோஜெனிக் என மூன்று விதமான எரிபொருள் இருக்கும். ராக்கெட்டின் மொத்த எடை 640 டன் ஆகும். இதன் மொத்த செலவு 300 கோடி ரூபாய் ஆகும். இந்த ராக்கெட் முழுமையாக வளர்ந்த 200 ஆசிய யானைகளின் எடைக்குச் சமமாகும். 

இந்த ராக்கெட் சுமந்து செல்லும் ஜி.சாட் -19 செயற்கைக்கோள் இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள்களிலேயே அதிக எடை கொண்டதாகும். இதன் எடை 3 ஆயிரத்து 136 கிலோவாகும். இதற்கு முன்னர் 2.3 டன்னுக்கு மேற்பட்ட எடை கொண்ட செயற்கைக்கோள்களை பிறநாடுகளின் உதவியுடன்தான் இந்தியா அனுப்பி வந்தது. அதற்கு அதிகமான எடையுடைய செயற்கைகோள்களை சுமந்து செல்லும் கிரையொஜெனிக் தொழில்நுட்பத்தை வடிவமைக்க இஸ்ரோவிற்கு பல ஆண்டுகள் ஆனது. விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இந்த வகை ராக்கெட் தான் தேவைப்படும். இதுபோன்ற தொழில்நுட்பம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது. 

என்ன செய்யும் ஜிசாட்?

ஜிசாட்- 19 செயற்கைகோள் 3 ஆயிரத்து 136 கிலோ எடைகொண்டது. இதன் மூலம் அதிவேக இன்டர்நெட் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகளை பெற முடியும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com