மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்... கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவின் நிலை இதுதான்! #PTInfographics

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஆறாவது முறையாக பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் இறுதி 20 இடங்களிலேயே தொடர்ந்து வருகிறது. இதுபற்றிய முழு தகவல், இங்கே...!
Happiest Countries
Happiest CountriesPT Infographics

‘சந்தோஷம்... சந்தோஷம்... வாழ்க்கையில் பாதி பலம்!’ என்று இங்கு ஒலித்துக்கொண்டிருந்தது. எங்கிருந்தோ வந்த அந்த வரி, சட்டென ஒரே நொடியில் ‘வாழ்க்கையில நாம எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம்’ என்ற எண்ணத்தை எழுப்பிவிட்டதென்றே சொல்லலாம். நாம தான் இப்படியா என்றால் இல்லை... நம்மை சுற்றி எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள். யாரைக்கேட்டாலும் ‘என்னடா இது நம்ம வாழ்க்கை எதை நோக்கி போகுதுன்னே தெரியல’ என்ற வடிவேலுவின் டயலாக்கை நியாபகப்படுத்தும் அளவுக்கு வேதனை பாட்டு பாடுகின்றனர்.

Happy
Happyfergregory

அட நம்ம பசங்க மட்டும் இப்படி இல்லப்பா.. உலகம் பூராவும் இதான் நிலைமை என்று சொல்லிக்கேட்க முடிகிறது. இதற்கெல்லாம் முடிவுகட்டதானோ என்னவோ, உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் சந்தோஷமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 20-ம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. இதனையடுத்து,

2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

World Happy day
World Happy day

இதுமட்டுமின்றி, உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலையும் தயாரித்து வெளியிட்டும் வருகின்றது ஐக்கிய நாடுகள் சபை. இதற்காக ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த 'Sustainable Development Solutions Network' என்ற நிறுவனத்துடன், சுமார் 1,700 உறுப்பினர்கள், Gallup World Poll, உலகின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் உதவியுடன் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலைத் தயார் செய்யும் ஆராய்ச்சிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஈடுபட்டு வருகின்றன.

World Happiness Report
World Happiness Report@HappinessRpt - Twitter
தனி நபர் ஒருவரின் வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), சமூகத்தின் அவருக்கான ஆதரவு, அவரின் ஆரோக்கியமான ஆயுட்காலம், வாழ்க்கை முறை, சுதந்திரம், அநீதிகள் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வறிக்கைப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

ஆராய்ச்சியின் முடிவில், ஒவ்வொரு ஆண்டும் World Happiness Report என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்படுகிறது. இதன்படி 2023ம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலையும் சுமார் 137 நாடுகளில் ஆய்வுசெய்து, குறிப்பாக அந்த நாட்டில் மக்கள் எந்த அளவு சந்தோஷமாக வாழ்கின்றனர் என்பதை பல்வேறு காரணிகளை வைத்து மதிப்பீடு செய்து, சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆய்வறிக்கையின் படி,

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஆறாவது முறையாக 7.804 மதிப்பெண்கள் பெற்று பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, டென்மார்க் (7.586) இரண்டாவது இடமும், ஐஸ்லாந்து (7.473) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

2021ம் ஆண்டு ஆய்வில் நான்காவது இடத்திலிருந்த ஐஸ்லாந்து கடந்த 2 வருடங்களாக 3வது இடத்தை தக்கவைத்து வருகிறது. நான்காவது இடத்தில் இஸ்ரேலும் (7.473), ஐந்தாவது இடத்தில் நெதர்லாந்தும் (7.395), ஆறாவது இடத்தில் ஸ்வீடனும் (7.395) உள்ளன.

உலகின் மகிழ்ச்சியான முதல் 10 நாடுகள் | Top 10 Happiest countries in World
உலகின் மகிழ்ச்சியான முதல் 10 நாடுகள் | Top 10 Happiest countries in WorldPT Infographics

தொடர்ந்து நார்வே (7.315), சுவிட்சர்லாந்து (7.240), லக்சம்பெர்க் (7.228), நியூசிலாந்து (7.123) போன்ற நாடுகள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் கடைசி 10 இடங்களை எடுத்துக் கொண்டால் அதில் ஆப்கானிஸ்தான் (1.859) கடைசி இடமான 137வது இடத்தில் உள்ளது. இதுமட்டுமின்றி 2022ம் ஆண்டும், 2021ம் ஆண்டும் கடைசி இடத்தை ஆப்கானிஸ்தான் தான் பெற்றது. இதனைத் தொடர்ந்து லெபனான் (2.392), 136வது இடத்தையும், மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் 135வது இடத்தையும் பெற்றுள்ளது. ஜிம்பாப்வே , காங்கோ ஜனநாயக குடியரசு, போட்ஸ்வானா, மலாவி, கொமொரோஸ், தான்சானியா, ஜாம்பியா, மடகாஸ்கர் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

உலகின் மகிழ்ச்சியான கடைசி 10 நாடுகள் | The last 10 happiest countries in the world
உலகின் மகிழ்ச்சியான கடைசி 10 நாடுகள் | The last 10 happiest countries in the worldPT Infographics
இந்த பட்டியலில் இந்தியா 4.036 மதிப்பெண்கள் பெற்று 126-வது இடத்தைப் பிடித்துள்ளது.

2022ம் ஆண்டில் 146 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பட்டியலில் 3.777 மதிப்பெண்கள் பெற்று 136வது இடத்தையும், 2021ம் ஆண்டில் 149 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பட்டியலில் 3.819 மதிப்பெண்கள் பெற்று 139 இடத்தையும் இந்தியா பெற்றது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவின் நிலை
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவின் நிலைPT Infographics
கடந்த ஆண்டு போர்களைச் சந்தித்த நாடுகளான ரஷ்யா (5.661) 70வது இடத்தையும், உக்ரைன் (5.071) 92வது இடத்தையும் பிடித்துள்ளன.

2022ம் ஆண்டில் உக்ரைன் 98வது இடத்தையும், ரஷ்யா 80வது இடத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான சில உலக நாடுகளை எடுத்துக்கொண்டால், இலங்கை 112வது இடத்திலும், பாகிஸ்தான் 108வது இடத்திலும், இந்தோனேசியா 84வது இடத்திலும், சீனா 64வது இடத்திலும், ஜப்பான் 47வது இடத்திலும், இங்கிலாந்து 19வது இடத்திலும், அமெரிக்கா 15வது இடத்திலும் உள்ளன.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்PT Infographics

இந்தியாவை மகிழ்ச்சியான நாடாக மாற்றி, இந்த பட்டியலில் மேலும் முன்னோக்கி நகர்த்தி செல்வதில் அரசுக்கு எந்தளவுக்கு பங்கு இருக்கிறதோ, அதேயளவுக்கு தனிநபர் ஒவ்வொருவருக்கும்கூட உண்டு.

வாங்க, கொண்டாட்டத்தோடும் மகிழ்ச்சியோடும் ஊர்கூடி முன்னே போவோம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com