ரசிகர்களால் மறக்க முடியாத இந்த நாள் ! உலகக் கோப்பை நினைவலைகள்

ரசிகர்களால் மறக்க முடியாத இந்த நாள் ! உலகக் கோப்பை நினைவலைகள்

ரசிகர்களால் மறக்க முடியாத இந்த நாள் ! உலகக் கோப்பை நினைவலைகள்
Published on

"7 வருஷம் ஆச்சு, ஆனா இன்னுமும் தோனி அடிச்ச விண்ணிங் ஷாட்டை மறக்க முடியல" இதுதான் இன்று காலை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வளைத்தலங்களில் பேசப்படும் பொருளாக மாறியது. ஆம், இதே தேதியில் 7 ஆண்டுகளுக்கு முன்பு தோனி தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதற்கு முன்பு, 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் உலகக் கோப்யை வென்றது. அதன், பின்பு 28 ஆண்டுகள் கழித்து, இந்திய வீரர்களை உலகக் கோப்பையை முத்தமிட்டனர். 


1983-க்கு பின்னர் ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டிகளிலும் இந்திய அணி சாம்பியன் ஆக வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், 21 வருடங்களுக்கு பின்னர் தான் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியது. 2007-ம் ஆண்டில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பையை வென்று இந்திய அணியை நிமிர வைத்தார் தோனி, அதே தோனி தலைமையிலான இந்திய அணி 50 ஓவர் 2011 உலகக்கோப்பையை வென்றது பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணி அனுபவும், விவேகமும் கொண்ட மூத்த மற்றும் இளைஞர்கள் நிரம்பியிருந்த அணி. உலகக் கோப்பை அணஇயில் சேவாக், சச்சின், ஜாகிர், காம்பீர், கோலி, ஹர்பஜன் சிங் என தலைசிறந்த வீரர்கள் கொண்டதாக இருந்தது. உலகக் கோப்பை போட்டியின் குரூப் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியுடன் மட்டும் தோற்று காலிறுதிக்கு சென்றது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் அப்போதைய சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி, சச்சின் யுவராஜ் சிங்கின் பிரமாதமான ஆட்டத்தில் பலனாக வெற்றிப்பெற்று, அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது. 

அரையிறுதியில் கிரிக்கெட் உலகின் பரம எதிரியான பாகிஸ்தானை பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் எதிர்கொண்டது இந்திய அணி. இந்தப் போட்டிக்கு பெரும் பரபரப்பு நிலவியது, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் ஆகியோர் முழு போட்டியையைும் நேரில் கண்டுகளித்தனர். ஆனால், அரையிறுதியிலும் இந்தியா தனது ஆதிக்கத்தை நிறுத்தி பாகிஸ்தானை வென்று உலகக் கோப்பை போட்டியில் இருந்து துரத்தியது.


மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணியை எளிதாக இந்தியா வென்று விடும் என்ற எதிர்பார்ப்பு தான் அனைவரிடமும் இருந்தது. சாலைகள் வெறிச்சோடி போய் அனைவரும் டி.வி.யின் முன்புறம் அமர, பல தனியார் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு விடுப்பு அளித்தது. ஆனால், போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி ஜெயவர்தனே சதத்துடன் 274 ரன்களை எடுத்ததும் அனைவரின் எதிர்பார்ப்பிலும் கல் விழுந்தது. உள்ளூரில் தானே வெற்றி இலக்கை எப்பாடுபட்டாவது இந்தியா அடைந்து விடும் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியா தனது முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் சேவாக் விக்கெட்டை பறிகொடுத்தது. 

சேவாக் அவுட்டில் நிறைய பேர் கடுப்பானாலும், சச்சின் இருக்கிறார் காப்பாற்றி விடுவார் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே 18 ரன்களில் அவரும் வெளியேற ரசிகர்களின் சந்தோசத்தில் இடியே விழுந்தது. நிறைய பேர் டி.வி.யை ஆப் செய்து விட்டு வேலையை பார்க்கத்தொடங்கினர். ஆனால், அப்போது தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. காம்பீர் மற்றும் கோலி ஜோடி பொறுமையுடன் ரன்களை எடுக்க டி.வி.யை ஆப் செய்தவர்கள் கொஞ்ச நேரம் பாக்கலாம் என ஆன் செய்தார்கள். கோலி 35 ரன்களில் ஆட்டமிழந்தாலும் காம்பீரின் பொறுப்பான ஆட்டம் அனைவருக்கும் நம்பிக்கை தந்தது. கோலிக்கு பின்னர் களமிறங்கிய தோனி அன்று ஆடிய ஆட்டம் இன்று வரை நம் மனக் கண்களை விட்டு அகலாது. அன்று கோப்பை வெல்ல முக்கிய  காரணமாக இருந்த காம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்தது வருத்தமளித்தாலும், இந்தியா வெற்றி இலக்கின் அருகில் வந்தது. 


கடைசி 2 ஓவர்களில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், யுவராஜ் சிங் ஒரு ரன்கள் எடுப்பார். பின்னர் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை எனும் போது தோனி அடித்த அந்த சிக்ஸ்!... ஆம். உங்கள் கண்ணில் காட்சிகளாய் விரியும் அதே சிக்ஸ் தான்.. குலசேகரா ஓவரில் தோனி "லாங் ஆன்" திசையில் அடித்த வரலாற்று சிக்சரில் இந்தியாவின் வெற்றிப் பெற்றது. சச்சினுக்காக இந்த உலகக் கோப்பயை நிச்சயம் வெல்வோம் என சூளுரைத்த இந்திய வீரர்கள், கோப்பையை வென்றப் பின் சச்சினை தங்களது தோல் மீது சுமந்து மைதானத்தை வலம் வந்தனர். அப்படியொரு சாதனையை கோலி தலைமையிலான இந்திய அணி 2019 உலகக் கோப்பையை வெல்லும் என்று நாம் நிச்சயம் நம்பலாம் !  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com