சென்னை மெட்டோ ரயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை மெட்டோ ரயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை மெட்டோ ரயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1.48 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் கட்டம் ஒன்று விமான நிலையம் முதல் கோயம்பேடு சென்னை சென்ட்ரல் விம்கோ நகர் வரையில் இரண்டு வழித்தடங்களில் 54.1 கிலோமீட்டர் (33.6 மைல்) நீளத்திற்கு இயக்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜனவரி மாதத்தில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்தை கடந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1.48 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. QR கோட் முறையை பயன்படுத்தி 21.96 லட்சம் பயணிகளும், பயண டிஜிட்டல் அட்டையை பயன்படுத்தி 36.54 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் க்யூ.ஆர் கோடு மற்றும் டிஜிட்டல் பயண அட்டைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு 20% சலுகை தரப்படுகின்ற நிலையில் பயண அட்டையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளைக்கு நாள் அதிகரித்து வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் துவங்கப்பட்டதிலிருந்து 2022 டிசம்பர் வரை 6.09 கோடி பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஒரு மாதத்தில் மட்டும் 66 லட்சம் பயணிகள் பயணித்துள்ளது சென்னையில் மெட்ரோ ரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருவதை காட்டுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com