எதன் அடிப்படையில் "ஹால் ஆஃப் பேஃம்" விருது வழங்குகிறது ஐசிசி ?

எதன் அடிப்படையில் "ஹால் ஆஃப் பேஃம்" விருது வழங்குகிறது ஐசிசி ?

எதன் அடிப்படையில் "ஹால் ஆஃப் பேஃம்" விருது வழங்குகிறது ஐசிசி ?
Published on

உலகின் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் "ஹால் ஆஃப் பேஃம்" விருது வழங்கி கவுரவிக்கிறது ஐசிசி. இது கிரிக்கெட் வீரர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், பிஷன் சிங் பேடி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோர் ஹால் ஆஃப் பேஃம் விருதினை பெற்றுள்ளனர்.

இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளில் பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ், ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் லிசா தலேகர், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸ் ஆகியோர் "ஹால் ஆஃப் ஃபேம்" விருதினை பெற்றுள்ளனர். இந்த மிகப்பெரிய விருதை பெறுவதற்கான விதிமுறைகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.


ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் ஒரு பேட்ஸ்மேன் இடம் பெற வேண்டுமானால், அவர் டெஸ்ட், மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்க வேண்டும்.

மொத்தமாக 20 சதங்கள் அடித்திருக்க வேண்டும். அல்லது அவரின் பேட்டிங் சராசரி 50க்கு மேல் இருக்க வேண்டும். சச்சின் டெண்டுல்கரைப் பொருத்தவரை, ஐசிசி விதியின்படி சச்சினுக்கு கூடுதல் தகுதி இருக்கிறது.

பந்துவீச்சாளராக இருந்தால், எந்த விதமான போட்டியிலும் அதாவது ஒருநாள் அல்லது டெஸ்ட் ஆகியவற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்க வேண்டும். டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 30 விக்கெட்டுகளுக்கும் குறைவில்லாமல் வீழ்த்திருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு சச்சின் ஒருநாள் போட்டியில் 154 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டியில் 46 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆனால், சச்சினைப் பொருத்தவரை பேட்ஸ்மேன் அங்கீகாரத்தில் மட்டுமே இடம் பிடிப்பார் என்பதால், பந்துவீச்சாளருக்கான தகுதி தேவையில்லை.

ஒரு வீரர் விக்கெட் கீப்பராக இருந்தால், ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்க வேண்டும். கேப்டனாக இருந்தால், அவரின் தலைமையில் 50 சதவீதத்துக்கு அதிகமான வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com