எஸ்.பி.பி நலம்பெற கூட்டு பிரார்த்தனை - ரசிகர்களுக்கு இளையராஜா அழைப்பு..!

எஸ்.பி.பி நலம்பெற கூட்டு பிரார்த்தனை - ரசிகர்களுக்கு இளையராஜா அழைப்பு..!

எஸ்.பி.பி நலம்பெற கூட்டு பிரார்த்தனை - ரசிகர்களுக்கு இளையராஜா அழைப்பு..!
Published on

எஸ்.பி.பி நலம்பெற கூட்டு பிரார்த்தனை செய்ய ரசிகர்களுக்கு இளையராஜா அழைப்பு விடுத்துள்ளார்

கொரோனா நோயின் கொடூர தாக்கத்தால் உலகநாடுகள் அனைத்தும் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி வருகிறது. நோய் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பித்து 144 தடைஉத்தரவு போட்டாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. நோயின் தாக்கம் அதிகரிப்பதும் குறைவதுமாக கண்ணாமூச்சி காட்டிவருகிறது.


கொரோனா நோய்த்தொற்றால் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் விரைவில் குணமடைந்து மீண்டும் பாட வரவேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.


பாலு சீக்கிரமா எழுந்துவா உனக்காக காத்திருக்கிறேன். இறைவனிடம் நான் பிராத்திக்கிறேன் நீ நிச்சயமாக திரும்பிவருவாய் என என்னுடைய உள்உணர்வு சொல்லுகிறது அது நிஜமாக நடக்கட்டும் என இறைவனை பிராத்திக்கிறேன் என்று கரகரத்த குரலில் நாதழுதழுக்க இளையாராஜா வெளியிட்ட வீடியே வைரலானது.


இதைத்தொடர்ந்து புதிதாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் இளையராஜா. அதில் நாளை மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி.க்காக நடைபெறுகின்ற கூட்டு பிரார்த்தனையில் நீங்கள் அனைவரும் கலந்துகொண்டு பிரார்த்திக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com