சீர்காழி: யாகசாலைக்காக தோண்டிய நிலத்தில் பழங்கால சிலைகளும், செப்பேடுகளும் கண்டுபிடிப்பு

இந்த சிலைகள், செப்பேடுகள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னவையாக இருக்கலாம் எனவும், அந்நியர்களின் படையெடுப்பால் பாதுகாப்பு கருதியே புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சட்டநாதர் கோவில், சீர்காழி
சட்டநாதர் கோவில், சீர்காழிPT

சீர்காழியில் இருக்கும் சட்டநாதர் ஆலயத்தில் நடைபெற இருக்கும் குடமுழுக்கு விழாவுக்காக யாகசாலை அமைக்கும் பணியானது தொடங்கியது.

இதற்காக மேற்கு கோபுர வாயில் அருகே யாகசாலை அமைக்கவேண்டி பள்ளம் தோண்டும் பொழுது விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை, திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மாணிக்கவாசரர், சோமஸ்கந்தர், அம்பாள், அய்யனார், உட்பட பல செப்பு சிலைகளும் 55 பீடம் மற்றும் 100 மேற்பட்ட செப்பு பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இச்செப்பு பட்டையங்களில் திருஞானசம்பந்தர், அப்பரின் திருப்பதிகங்கள் உள்ளது என்கின்றனர். இதை கண்டதும் பக்தர்கள் மகிழ்சியில் திக்குமுக்காடி உள்ளனர்.

இவை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னவையாக இருக்கலாம் எனவும், அந்நியர்களின் படையெடுப்பால் பாதுகாப்பு கருதியே புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

இக்கோவிலின் கும்பாபிஷேகமானது மே மாதம் 24ம் தேதி நடைப்பெற இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com