சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்

சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்

சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்
Published on

சுற்றுலா பயணிகளின் ரசனைகள் வித்தியாசப்பட்டு வருகிறது. அதனை உணர்ந்த விடுதி நிறுவனங்களும் விந்தையான விடுதிகளை கட்டுமானம் அதிசயிக்க வைத்து வருகின்றன.அந்த வகையில் தற்போது சுவீடனில் உள்ள ஐஸ் ஹோட்டல் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகி இருக்கிறது.

சீசனுக்கு தகுந்தாற்போல பனிக்கட்டியால் உருவான எத்தனையோ ஐஸ் ஹோட்டல்கள் இருந்து வந்தாலும், நிரந்தமாக இயங்கும் வகையில் ’ஐஸ் ஹோட்டல் 365’ விடுதி சுவிடனில் உள்ள ஜக்கஸ்ஜார்வி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள், படுக்கைகள், அம்சமான சுவர்கள் என ஒவ்வொன்றுமே சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பனிக்கட்டிகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சுமார் 2100 சதுர மீட்டர் கொண்ட இந்த ஐஸ் ஹோட்டலில் 20 அறைகள் கட்டப்பட்டுள்ளன.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பொழுதுபோக்குவதற்காக, நாய்கள் பூட்டப்பட்ட சறுக்கு வண்டிகளில் சவாரி செய்யும் ஏற்பாடுகளும் உள்ளது. முப்பதாயிரம் லிட்டர் நீரை க்கொண்டு இந்த ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 50 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வந்து தங்கிச் செல்கின்றனர். 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் சோலார் பேனல் மூலம் உருவான மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதி ஏதேனும் காரணங்களால் உருக ஆரம்பித்தால், மீண்டும் ஆற்றில் கலக்கும் அமையும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com