பரபரப்பாக தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை: இந்தியா முதல் பப்பூவா நியூ கினி வரை....

பரபரப்பாக தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை: இந்தியா முதல் பப்பூவா நியூ கினி வரை....
பரபரப்பாக தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை: இந்தியா முதல் பப்பூவா நியூ கினி வரை....

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுவிட்டன. மேலும் 4 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும். முதலில் இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருந்த சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தத் தொடரில் சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகளின் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டது ஐசிசி. அதன்படி குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1-இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன. குரூப் 2-வில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் உள்ளன. குரூப் B தகுதி சுற்று வெற்றியாளரும், குரூப் A தகுதி சுற்றின் ரன்னரும் விளையாட உள்ளனர்.

தகுதி சுற்றுப் போட்டிகள் அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஓமன், பப்புவா நியூ கினி, இலங்கை, நமீபியா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் போட்டிகள் இம்மாதம் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்க இருப்பதால், டி20 உலகக் கோப்பைக்கான அணிகளை ஏற்கெனவே பல நாடுகள் அறிவித்துவிட்டன. இப்போது அறிவிக்கப்பட்ட அனைத்து அணிகள் குறித்த விவரங்களையும் நாம் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

இந்தியா : விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், ரவிசந்திரன் அஸ்வின், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.
ரிசர்வ் வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹார், ஷர்துல் தாக்குர்.

பாகிஸ்தான்: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஆசிப் அலி, அசாம் கான், ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி, இமாத் வாசிம், குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைந், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், ஷாஹின் ஷா அப்ரிதி, ஷோஹைப் மஸ்கூத்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச் (கேப்டன்), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், ஜோஷ் இன்கலிஸ், மிட்சல் மார்ஷ், மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிட்சல் ஸ்வெப்சன், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்லே, ட்ரெண்ட் பவுல்ட், மார்க் சாப்மேன், டேவோன் கான்வே, லூக்கி பெர்கியூசன், மார்டின் குப்தில், ஜேமிசன், டேரில் மிட்சல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்சல் சாண்ட்னர், டிம் செப்ரெட், இஷ் சோதி, டிம் சவுத்தி, ஆடம் மில்னே.

வங்கதேசம்: மகமதுல்லா (கேப்டன்), நயிம் ஷேக், சவும்யா சர்கார், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகிர் ரஹீம், ஆபிப் ஹூசைன், நூருல் ஹசன் சோஹன், ஷக் மஹேதி ஹசன், நசும் அகமது, முஸ்தாபிஸூர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, ஷைபர் உத்தின், ஷமிம் ஹூசைன்.

வெஸ்ட் இண்டீஸ்: பொல்லார்டு, நிகோலஸ் பூரன், பேபியன் ஆலன், டுவைன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஆண்ட்ரே பிளெட்சர், கிறிஸ் கெயில், ஷிம்ரன் ஹெட்மயர், எவின் லெவிஸ், ஓபட் மெக்காய், சிம்மன்ஸ், ரவி ராம்பால், ஆண்ட்ரே ரசல், ஒஷானே தாபஸ், வால்ஷ் ஜூனியர்.

தென் ஆப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), கேஷவ் மஹராஜ், குவிண்டன் டிகாக், ஜோர்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், கிளாசன், மார்க்ரம், டேவிட் மில்லர், முல்டர், லுங்கி என்கிடி, அன்ரிச் நோர்ஜே, பிரடோரியஸ், ரபாடா, ஷம்சி, வான்டர் டசன்.

இங்கிலாந்து: இயான் மார்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜோனதன் பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரண், கிறிஸ் ஜார்டன், லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், டைமல் மில்ஸ், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

ஆப்கானிஸ்தான்: ரஷித் கான், ரஹமனுல்லா குர்பாஸ், ஹஸ்ரதுல்லா சசாய், உஸ்மான் கனி, அஸ்கர் ஆப்கன், முகமது நபி (கேப்டன்), நஜிமுல்லா சாத்ரன், ஹஷ்மதுல்லா ஷாஹிதி, முகமது ஷசாத், முஜிபுர் உர் ரஹ்மான், கரீம் ஜனத், குல்பதின் நயிப், நவீன் உல் ஹக், ஹமித் ஹசன், ஷராபுதின் அஷ்ரப், தவ்லாத் சாத்ரன், ஷபூர் சாத்ரன், கைஸ் அகமது.

இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்ஜய டிசில்வா, குசால் பெரேரா, தினேஷ் சண்டிமால், அவிஷ்கா பெர்ணான்டோ, பனுகா ராஜபக்சே, சரித் அசலங்கா, வணிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ், சமிகா கருணாரத்னே, நுவான் பிரதீப், துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜயவிக்ரமா, லஹிரு மதுஷன்கா, மகீஷ் தீக்ஷனா.

ஓமன்: சீஹன் மஸ்கூத் (கேப்டன்), அகிப் இலியாஸ், ஜதிந்தர் சிங், கவார் அலி, முகமது நதீம், அயான் கான், சூரஜ் குமார், சந்தீப் கவுட், நெஸ்டர் தம்பா, கலீமுல்லா, பிலால் கான், நசீம் குஷி, சுபியான் மெஹ்மூத், பையாஸ் பட், குர்ரம் கான்.

பப்புவா நியூ கினி: அஸ்ஸாத் வலா (கேப்டன்), சார்லஸ் அமினி, லேகா சியாகா, நார்மன் வனுவா, நொசைனா பொகானா, கிப்லிங் டோரிகா, டோனி உரா, ஹிரி ஹிரி, கவுடி டோகா, சீசே பவு, டேமியன் ரவு, கபவுவா வாகி மோரியா, சிமான் அடாய், ஜேசன் கிலா, சாட் சோபர், ஜாக் கார்ட்னர்.

ஸ்காட்லாந்து: கைல் கோட்சர் (கேப்டன்), ரிச்சர்ட் பெரிங்டன், டைலான் பட்ஜ், மேத்யூ கிராஸ், ஜோஷ் டேவி, அலஸ்டைர் இவான்ஸ், கிறிஸ் கிரீவ்ஸ், ஓலி ஹேர்ஸ், மைக்கல் லீஸ்க், காலம் மெக்லியோட், ஜார்ஜ் முன்சே, சாப்யன் ஷரிப், கிறிஸ் சோலே, ஹம்சா தாஹிர், கிரேக் வாலஸ், மார்க் வாட், பிராட் வீல்.

நெதர்லாந்து: பீட்டர் சீலர் (கேப்டன்), கோலின் ஆக்கர்மேன், பிலிப் போசிவேன், பென் கூப்பர், பாஸ் டே லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ், பிரண்டன் கிளோவர், கிளாசன், ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் டோட், ரயான் டென் டோஸ்டே, லோகன் வான் பீக், டிம் வான் டெர் குக்டன், வான்டர் மெர்வ், பவுல் வான் மீக்ரென்.

நமிபியா: கெர்ஹார்ட் இராஸ்மஸ் (கேப்டன்), ஸ்டீபன் பார்ட், கார்ல் பிர்கென்ஸ்டாக், மிசாவ் டு ப்ரீஸ், ஜான் ப்ரைலிங், சேன் க்ரீன், நிகோல் லோபி ஈடன், பெர்னாட் ஸ்கோல்ஸ், பென் ஷிகோங்கோ, ஜேஜே ஸ்மித், ரூபன் டிரம்பள்மண், மைக்கல் வான் லிங்கன், டேவிட் வைஸ், கிரேக் வில்லியம், பிக்கி யா பிரான்ஸ்.

அயர்லாந்து: ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), மார்க் அடைர், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், ஷேன் கெட்கேட், கிரஹாம் கென்னடி, ஜோஷ் லிட்டில், ஆண்ட்ரூ மெக்பிரைன், பேரி மெக்கார்த்தி, கெவின் ஓ பிரைன், நீல் ராக், சிமி சிங், பவுல் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டார், லார்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com