கணினியில் விண்டோஸ் 11 இயங்குதளத்திற்கு அப்டேட் செய்து கொள்வது எப்படி? - ஒரு எளிய வழிகாட்டி

கணினியில் விண்டோஸ் 11 இயங்குதளத்திற்கு அப்டேட் செய்து கொள்வது எப்படி? - ஒரு எளிய வழிகாட்டி
கணினியில் விண்டோஸ் 11 இயங்குதளத்திற்கு அப்டேட் செய்து கொள்வது எப்படி? - ஒரு எளிய வழிகாட்டி

அமெரிக்காவின் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான விண்டோஸ் 11 கடந்த சில தினங்களுக்கு முன்னர் பயனர்களின் பயன்பாட்டுக்கு வந்தது. 

உலகளவில் பெரும்பாலான மக்கள் தங்களது கணினிகளை இயக்க உதவும் இயங்குதளமாக விண்டோஸை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 1985-வாக்கில் முதன்முதலாக விண்டோஸ் இயங்குதளத்தை அறிமுகம் செய்ததிருந்தது மைக்ரோசாஃப்ட். அப்போது விண்டோஸ் 1.0. அப்படியே படிப்படியாக வளர்ந்து இன்று வெர்ஷன் 11 வரை விண்டோஸ் வந்துள்ளது. 

இந்த புதிய வெர்ஷனை கணினியில் எப்படி அப்டேட் செய்து கொள்வது என்பதை பார்ப்போம்?

விண்டோஸ் 11 இயங்குதளத்தை முற்றிலும் இலவசமாக கணினிகளில் அப்டேட் செய்து கொள்ளலாம். அதற்கான நோட்டிபிகேஷன் அழைப்பை ஒவ்வொரு பயனராக விடுத்து வருகிறது மைக்ரோசாஃப்ட். மில்லியன் கணக்கான பயனருக்கு ஒரே இரவில் இதனை செய்வது சவாலான காரியம். அதே நேரத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அழைப்பு இல்லாமல் பயனர்கள் தாமாகவே தங்களது கணினியின் இயங்குதளத்தை அப்டேட் செய்து கொள்ளலாம். இதற்கு பயனர்களின் கணினியில் சில மினிமம் ரெக்வொயர்மெண்ட் தேவைப்படுகிறது. அதை மைக்ரோசாஃப்ட் லிஸ்ட்-அவுட் செய்துள்ளது. 

முதலில் தங்களது கணினியில் விண்டோஸ் 11 அப்டேட் செய்து கொள்ள விரும்பும் பயனர்கள் செட்டிங்ஸ்>விண்டோஸ் அப்டேட், டேகில் சென்று செக் செய்து பார்க்கலாம். அதில் அப்டேட் குறித்த விவரம் ஏதும் தென்படவில்லை எனில் பயனர்கள் தங்களது கணினியில் ‘மைக்ரோசாஃப்ட் PC ஹெல்த்’ அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

அதன் பிறகு அந்த அப்ளிகேஷனை ரன் செய்து உங்களது கணினி விண்டோஸ் 11 அப்டேட்டை சப்போர்ட் செய்யுமா என்பதை சோதனை மூலம் தெரிந்துக் கொள்ளலாம். ‘This PC meets Windows 11 requirements’ என வந்தால் அடுத்த கட்டத்திற்கு நகரலாம். 

அது என்ன விண்டோஸ் 11 ரெக்வொயர்மெண்ட்?

>புராஸசரை பொறுத்த வரையில் 1 ஜிகாஹெர்ட்ஸ் (GHz) அல்லது Compatible 64-பிட் புராஸசர் அல்லது SoC இருக்க வேண்டும். 

>4ஜிபி ரேம் இருக்க வேண்டும். 

>ஸ்டோரேஜை பொறுத்த வரையில் 64ஜிபி அல்லது அதற்கு கூடுதலான ஸ்டோரேஜ் கொண்டுள்ள சாதனமாக இருக்க வேண்டும். 

>Unified Extensible Firmware Interface இருக்க வேண்டும். 

>TPM வெர்ஷன் 2.0 இருக்க வேண்டும். 

>கிராபிக்ஸ் கார்டு, HD டிஸ்பிளே கொண்டிருக்க வேண்டும். 

>இது தவிர இணைய இணைப்பு மற்றும் மைக்ரோசாஃப்ட் அக்கவுண்ட் ஒன்றும் தேவைப்படுகிறது. 

இந்த ரெக்வொயர்மெண்ட்களை பயனர்களின் கணினி பூர்த்தி செய்தால் விண்டோஸ் 11 சாப்ட் வேர் தரவிறக்க பக்கத்திற்கு சென்று புதிய இயங்குதளத்தை சுலபமாக அப்டேட் செய்யலாம். 

விண்டோஸ் 11 இன்ஸ்டாலேஷன் அசிஸ்டண்ட், கிரியேட் 11 இன்ஸ்டாலேஷன் மீடியா மற்றும் விண்டோஸ் 11 டிஸ்க் இமேஜை (ISO) டவுன்லோட் என மூன்று விதமாக புதிய இயங்குதளத்தை பயனர்கள் அப்டேட் செய்து கொள்ளலாம். இதில் விண்டோஸ் 11 இன்ஸ்டாலேஷன் அசிஸ்டண்ட் மிகவும் சுலபமானது. இது நேரடியாக கணினிகளில் சில நிமிடங்களில் விண்டோஸ் 11 அப்டேட் செய்து கொள்ள உதவுகிறது. 

அடுத்து இரண்டு முறையை பின்பற்றும் போது யுஎஸ்பி மற்றும் டிவிடி-களை பயன்படுத்த வேண்டி இருக்கும். அதன் பிறகு அந்த அக்சஸரிஸ் மூலமாக புதிய வெர்ஷனை அப்டேட் செய்து கொள்ள வேண்டி இருக்கும். 

விண்டோஸ் 11 இன்ஸ்டாலேஷன் அசிஸ்டண்ட் மூலம் அப்டடேட் செய்யும் போது 9ஜிபி ஃப்ரீ டிஸ்க் ஸ்பேஸ் இருக்க வேண்டும். 

‘டவுன்லோட் நவ்’ பட்டனை சொடுக்குவதன் மூலம் அடுத்த சில நிமிடங்களில் விண்டோஸ் 11 இயங்குதளத்தை தரவிறக்கம் செய்து விடலாம். பின்னர் அதனை சொடுக்கி ரன் > Accept and Install > Restart Now கொடுத்தால் விண்டோஸ் 11 இன்ஸ்டாலாக தொடங்கி விடும். சுமார் 30 நிமிடங்கள் முதல் 50 நிமிடங்கள் வரை இந்த இன்ஸ்டாலேஷன் பிராசஸ் நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் கணினியை புதிய இயங்குதளத்தின் துணையுடன் இயக்கலாம். 

இந்த இன்ஸ்டாலேஷனின் போது கணினி இரண்டுக்கும் மேற்பட்ட முறை ரீ-ஸ்டார்ட் ஆகும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தடையில்லாத பவர் மற்றும் இணைய இணைப்பும் இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com