இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் உடல் பருமன் ஒரு பிரச்னையாக உள்ளது. இதற்கு நமது உணவு பழக்கமும் வேலையும் தான் காரணம். நம்மில் பலருக்கு உடலை வருத்தி செய்யும் வேலை இல்லை. இல்லத்தரசிகள் செய்யும் பணிகளுக்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. உடலில் அதிகளவு கொழுப்பு சேருவதால் தான் எடை கூடுகிறது.
உடல் எடையை குறைக்க பலர் தங்கள் பொழுதை ஜிம்மில் செலவழிக்கின்றனர். கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க முயல்கின்றனர்.இதோ உடல் எடையை குறைக்க எளிமையான சில டிப்ஸ்..
சைக்கிள் ஓட்டலாம்
உடல் எடையை குறைக்க சைக்கிளிங் மேற்கொள்ளலாம். தினமும் காலை, மாலை என இரு வேளைகள் உங்கள் நேரத்திற்கு ஏற்ப சைக்கிளிங்கில் செலவிடலாம். தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு சைக்கிள்களில் செல்லலாம். வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் நீண்டதூரம் சைக்கிள் பயணம் செய்யலாம். இதன் மூலம் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். பருமனையும் குறைக்கலாம்.
நீச்சல்
உடல் எடையை குறைக்க நீச்சல் அடிக்கலாம். நீச்சல் அடிக்கும் போது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் தங்கள் பணிகளை செய்யும். இரத்த ஓட்டமும் சீராகும். உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
விளையாட்டு
வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் கிரிக்கெட். கபடி, போன்ற விளையாட்டுகளை நேரத்தை செலவிடாமல் இது போன்ற விளையாட்டுகளை ஆர்வமாக விளையாட வேண்டும். உடல் பருமன் குறையும் நண்பர்கள் வட்டம் பெரிதாகும்
ஸ்கிப்பிங்
நமது இல்லங்களில் கண்டிப்பாக ஏதாவது ஒரு மூலையில் இந்த ஸ்கிப்பிங் கயிறு கண்டிப்பாக இருக்கும். சிறார்களாக இருக்கும் போது ஆர்வமாக விளையாடிய விளையாட்டு. தற்போது மீண்டும் அந்த காலத்தை நினைவு கூர்ந்து விளையாடுங்கள் உங்கள் எடை தானாக குறையும்.
வாகனங்களை சுத்தம் செய்யுங்கள்
உங்கள் இல்லத்தில் இருசக்கரம் அல்லது நான்கு சக்கரம் வாகனம் உள்ளதா? எதற்கு இவற்றை கழுவ செலவு செய்கிறீர்கள் இந்த பணிகளை நீங்களே மேற்கொள்ளுங்கள்.
மேற்கூறியவற்றை செய்ய உங்களுக்கு நேரம் இல்லையா? அதற்கான இடவசதி இல்லையா? கவலையேவேண்டாம்.. இதோ உங்களுக்கு ஒரு டிப்ஸ்
இசை
இசையை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. உங்கள் இல்லத்தில் உங்களுக்கு பிடித்த நடிகர், இசையமைப்பாளர், பாடல்களை ஒலிக்க செய்து ஆடுங்கள்.
கணவர் மனைவி இருவரும் இணைந்து ஆடுங்கள். உடல் பருமன் குறையும். உங்களுக்கு இடையில் அன்பு கூடும்.