இன்னும் சில நாட்களில் குரூப் IV தேர்வு..... தயார் ஆவது எப்படி?

இன்னும் சில நாட்களில் குரூப் IV தேர்வு..... தயார் ஆவது எப்படி?
இன்னும் சில நாட்களில் குரூப் IV தேர்வு..... தயார் ஆவது எப்படி?

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் – IV (தொகுதி-IV) ல் அடங்கிய பணிகளுக்கான, 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 11.02.2018 அன்று முற்பகல் எழுத்துத் தேர்வை நடத்தவுள்ளது. இத்தேர்வுக்கு 20.8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள் என்றும் ஒரு அறிவிப்பு வெளியாகியிருந்தது. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் இந்நேரத்தில், என்ன செய்வது என்று அறியாமல் பலரும் புத்தகம் கையுமாகவே இருந்து வருகிறார்கள். ஒரு பகுதியினர் தேர்வுக்கான தனிப்பயிற்சியையும், மற்றும் சில பகுதியினர் தானாகவே பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். வெற்றியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், அதிக மதிப்பெண்களை பெறுவதற்கான சில டிப்ஸ்களை இணைத்துள்ளோம்.
 
தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான சில டிப்ஸ்:

1. முதற்கட்டமாக கடைசி 4 வருட கேள்வித்தாள்களை எடுத்துக்கொண்டு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
2. Arihant புத்தகத்தில், பின் பக்கம் இருக்கும் Subject wise கேள்வி, பதில்களைக் கொண்டு பயிற்சியை மேற்கொள்ளலாம். 
3. கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடங்களில் ஏதேனும் விடுபட்டிருந்தால் தவறாமல் பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும். 
வரலாறு: பழங்கால வரலாறு, MID LEVEL, MODERN HISTORY
புவியியல்: EARTH FORMATION, ABOUT RIVERS
கணிதம்: NUMBER SERIES, TRAIN, SI, CI, STATEMENT & CONCLUSION, LCM, HCF, RATIO & PROPORTION
குடிமையியல்: LAW, PARLIMENT, VOTING SYSTEM AND DATE OF JOIN OF MINISTER AND THIER LOCATION OF HOME TOWN
ஆங்கிலம்: கடைசி 14 வருட கேள்விகளை கண்டிப்பாக பார்க்கவேண்டும். 
இயற்பியல்: FORCE, PENDULUM, ANY SMALL SUMS
வேதியியல்: PERIODIC TABLE, CHEMICAL IMPORTANT, FORMULA AND ELECTROLYSIS PROCESS
தாவரவியல்: GENETICAL AND BOTANICAL NAME OF A PLANT, PHOTOSYNTHESIS PROCESS, ROOTS & LEAVES & GROWTH OF PLANT, PRIMARY, SECONDARY AND TERTIORY SECTOR
விலங்கியல்: ABOUT HEART ARTICLE & VENTRICLE, HUMAN BODY PARTS AND ITS FUNCTION, BONES AND MUSCLES
தமிழ்: கடைசி 14 வருட கேள்விகளை கண்டிப்பாக பார்க்கவேண்டும். அதன் பிறகு AUTHOR AND THEIR WORKS
ECONOMICS: NIFTY. CENSUS, POPULATION, RURAL WELFARE, CHILD LABOR, HUMAR WELFARE, NITI-AYOG, FINANCE COMMISSION, 7TH PAY COMMISSION
மேலே குறிப்பிட்டுள்ள பாடப்பகுதிகளை தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட்டு படிக்க வேண்டும். குறுகிய நாட்கள் என்பதால் படித்தது போதும், நமக்கு தேவை நினைவூட்டல் பயிற்சி மட்டுமே. தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..... 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com