நமது அண்டை நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு? - ஓர் ஒப்பீட்டு பார்வை

நமது அண்டை நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு? - ஓர் ஒப்பீட்டு பார்வை
நமது அண்டை நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு? - ஓர் ஒப்பீட்டு பார்வை

நாடெங்கிலும் பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை கடந்து மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்டை நாடுகளில் எரிபொருள்களின் விலை எவ்வளவு என்ற ஒப்பீட்டைப் பார்க்கலாம்.

நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூட்டான், மியன்மார், இலங்கை ஆகிய நாடுகளில் பெட்ரோல் விலை இந்தியாவைவிட குறைவாகவே உள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான், மியன்மார் மற்றும் இலங்கையிலும் பெட்ரோல் விலை இந்தியாவை விட 30 முதல் 40 சதவிகிதம் வரை குறைவாகவே உள்ளது. பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் பணவீக்கம் அதிகமாக இருந்தாலும் பெட்ரோல் விலை இந்தியாவை விட குறைவாகவே உள்ளது.

ஒவ்வொரு நாட்டுடைய கரன்சி மதிப்பும் தினசரி மாறுபடுகிறது என்பதால், உலக அளவில் பெரும்பாலான பணிகளுக்கு பயன்படும் அமெரிக்க டாலர் மதிப்புபடி கணக்கிட்டாலும், இந்தியாவில் அண்டை நாடுகளை விட பெட்ரோல் விலை அதிகமாகவே உள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 106 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், பூட்டானில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்திய ரூபாய் மதிப்பில் 81 ரூபாய் 30 காசுகளுக்கும், நேபாளத்தில் 81 ரூபாய்க்கும், வங்கதேசத்தில் 78 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 68 ரூபாய்க்கும், மியான்மரில் 63 ரூபாய்க்கும், பாகிஸ்தானில் 60 ரூபாக்கும் விற்கப்படுகிறது.

ஒவ்வொரு நாடும் வசூலிக்கும் வரிகள் மற்றும் அளிக்கும் மானியங்கள் இவற்றின் அடிப்படையில் நுகர்வோர் பெட்ரோலுக்கு அளிக்க வேண்டிய விலை நிர்ணயிக்கப்படுகிறது. போக்குவரத்து செலவு மற்றும் சுத்திகரிப்பு செலவும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது என்றாலும், இந்தியாவில் பெட்ரோல் விற்கப்படும் விலைக்கும் அண்டை நாடுகளில் விற்கப்படும் விலைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com