வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற பயிற்சி என்னென்ன ? சொல்லி அடிப்போம் இன்று..!
தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்து வேலையின்றி தவித்து வரும் சூழ்நிலையில் பல நிறுவனங்கள் வெறும் டிகிரியை மட்டும் எதிர்பார்ப்பது இல்லை. மாணவர்களிடம் படிப்பை தவிர வேறு மொழி அறிவு மற்றும் வேலை சம்பந்தமான பயிற்சி இருக்கிறதா என்பதை பார்க்கிறார்கள்.
"லட்சக்கணக்கான மாணவர்கள் கல்லூரியை முடித்து வருகிறார்கள். அதில் பல மாணவர்கள் வெறும் டிகிரி சான்றிதழை மட்டும் காண்பிக்கிறார்கள். சில மாணவர்கள் மட்டுமே டிகிரி சான்றிதழுடன் VALUE ADDED COURSE பயிற்சிகளை எடுத்திருக்கிறார்கள். வேலைக்கு வருபவர்கள் இதுபோன்ற பயிற்சிகளை பெற்றிருந்தால் பயிற்சி தர அவசியம் ஏற்படாது. குறிப்பாக, மாணவர்கள் பயிற்சியில் சேருவதற்கு முன் கற்றுத்தரும் பயிற்சியாளரை சந்தித்து அவரிடம் இருக்கும் அனுபவத்தை தெரிந்துக் கொண்ட பின்பு சேருவது நன்மை. வெறும் சான்றிதழிற்காக படிக்காமல், அறிவை வளர்த்துவதற்காக படித்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் " என்கிறார் சான் இன்னவேஷன்ஸ் லேப் நிறுவனத்தின் நிர்வாக இயங்குனர் திரு.கார்த்திக்.
கல்லூரியில் படிக்கும்போதே மாணவர்கள், வேலை வாய்ப்புக்கு தேவையான பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் வேலை வாய்ப்பில்லா சூழ்நிலையை குறைக்க முடியும். கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக்/ பி.எஸ்.சி அல்லது எம்.சி.ஏ படித்தவர்கள் அல்லது படித்துக்கொண்டிருப்பவர்கள் எந்த வகுப்புகளில் பயிற்சி பெறலாம்?..
1. ASP (Application Service Provider)
பயன்பாட்டு சேவை வழங்குநர் என்றும் இதனைச் செல்லலாம். Standard Protocol எனப்படும் http மூலம் வாடிக்கையாளர்களுக்கு கணினி சார்ந்த சேவைகளை வழங்கும் Customer Relationship Management போன்ற சாஃப்ட்வேர்களை பயன்படுத்துவது.
2. ASP.NET
ASP.NET பயிற்சி பெறுபவர்கள், வலைத்தள மேம்பாட்டுப் (Website Development) பணியில் டைனமிக் வலை பக்கங்களை (Dynamic webpage) உருவாக்க முடியும். வெப்டிசைனிங் சம்பந்தப்பட்ட வேலையில் சேருவதற்கு இந்த பயிற்சி உதவியாக இருக்கும்.
3. Assembly Language
Assembly Language என்பது Low – level புரோகிராமிங் லாங்குவேஜ். கம்ப்யூட்டர் ஹார்டுவேரை இடைமுகப் (Interface) படுத்துவதற்காக இந்த லாங்குவேஜ் பயன்படுகிறது.
4. C & C++,
ஐ.டி நிறுவனங்கள் C & C++ புரோகிராமிங் லாங்குவேஜ் படித்தவர்களை அதிகமாக தேர்வு செய்கிறார்கள். இந்தப் பயிற்சியை பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். சான்றிதழ் அவசியம் என்று பல நிறுவனங்களின் கருத்து.
5. HTML/ Java Script/ CSS
மொபைல் அப்ளிகேஷன் டவலப்மெண்ட் செய்ய HTML/ Java Script/ CSS படித்திருக்க வேண்டும். இந்த பயிற்சியை பெற்றிருப்பவர்கள், மொபைல் அப்ளிகேஷனை உருவாக்க முடியும்.
6. COBOL
இதுவும் கம்ப்யூட்டர் புரோகிராமிங் லாங்குவேஜ் தான். பிசினஸ் பயன்பாட்டுக்காக COBOL உருவாக்கப்பட்டுள்ளன.
7. DB2
டேட்டா பேஸ் சர்வர் இது. ஐ.பி.எம் நிறுவனத்தால் IBM DB2 என மேம்படுத்தப்பட்டுள்ளன.