'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை

'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை

ஜல்லிக்கட்டு... தமிழகத்தை பொறுத்தவரை மிகவும் தொன்மையானது. ஜல்லிக்கட்டு வரலாறு என்ன என்பது பற்றியும், மதுரை மண்ணில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பற்றியும்  பார்க்கலாம்.

ஐந்திணை நிலங்களில் ஒன்றான முல்லை நிலத்தில் வீட்டில் வளர்க்கப்படும் காளைகளை, வேட்டைக்கு அழைத்துச்செல்வதும், அவற்றுடன் மோதி விளையாடுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. ஏறுதழுவதல் என்று குறிப்பிடப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் குறித்து கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை பாடல்களிலேயே குறிப்பிடப்படுவதால் இதன் தொன்மையை அறியலாம்.

ஜல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் எனக் கூறப்படுகிறது. முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன பெண்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை கைவிட வேண்டும் என்பதற்காகவே விழாவின்போது 'சல்லிக் காசு' என்னும் நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சு வழக்கில் திரிந்து 'ஜல்லிக்கட்டு' என்று ஆனது என்றும் கூறப்படுகிறது. மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் தங்களுக்கு பெருமை என்கிறார்கள் இந்த ஊர் பெண்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடங்கல் வந்தபோது மக்களின் கோரிக்கையால் ஆங்கிலேயர்கள் அனுமதி அளித்துள்ளதாக கூறுகிறார்கள் அலங்காநல்லூர் முதியவர்கள்.

வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள், வர்ணனை போன்ற கட்டமைப்புகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்ப்பதும் இந்த அளவிற்கு பெருமை பெற காரணமாக பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு பிரத்தியேக கேலரிகள், பரிசாக, சாதாரண துண்டில் தொடங்கி விலை உயர்ந்த பரிசுகளை வழங்குவது வரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக அளவில் கவனம் ஈர்க்கும் போட்டியாகவே நீடிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com