"விடுதலை கருணை அல்ல, கடமை"- ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReleasePerarivalan  ஹேஷ்டேக்

"விடுதலை கருணை அல்ல, கடமை"- ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReleasePerarivalan  ஹேஷ்டேக்
"விடுதலை கருணை அல்ல, கடமை"- ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReleasePerarivalan  ஹேஷ்டேக்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் திரையிலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ட்விட்டரில் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில இங்கே..

நடிகர் ஆர்யா

நீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள்... சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம் அம்மாளும்தான்.

நடிகர் பிரகாஷ்ராஜ்

தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக  நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்ப வேண்டியிருக்கிறது.

நடிகர் பார்த்திபன்

அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும், துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால்,அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்.

நடிகர் விஜய் சேதுபதி

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து பேரறிவாளனை சீக்கிரமாக விடுதலை செய்ய வேண்டும்-

இயக்குனர் சமுத்திரக்கனி

அறிவின் அப்பாவின் உடல் நலன் விசாரித்தேன். மிக கவலை அளிக்கிறது. மாண்புமிகு முதல்வரே மேதகு ஆளுநரை சந்தித்து அறிவு விடுதலை கோப்பில் உடனே கையெழுத்து பெற்றிடுக.

நடிகர் விஜய் ஆண்டனி

நிரபராதியான சகோதரர் பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்; உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும் தாமதிப்பது நீதியல்ல!

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்

ஒரு குற்றமும் செய்யாத மனிதனுக்கு 30 ஆண்டுகள் சிறை.. தனது மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருட போராட்டம். இவர்களுக்கு தமிழக முதல்வர், ஆளுநர் நீதி வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறோம். தயவுசெய்து இனியாவது தாயும் மகனும் ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ விடுங்கள்.   

Dr Ravikumar MP

மேதகு ஆளுநர் அவர்களே! உச்சநீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பே பேரறிவாளன் விடுதலைக்கு ஒப்புதல் வழங்குங்கள்! ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்

பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து

விடுதலை - அடிப்படை உரிமை

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

பேரறிவாளனை விடுதலை செய்ய குரல் கொடுப்போம்-

Aadhavan Dheetchanya

ஒரு நிரபராதி விடுதலை செய்யப்படுவதே நீதியின் அடிப்படையாக இருக்கமுடியும்.

தமிழ் செழியன்

ஒவ்வொரு சட்டரீதியான இடையூறும் கடந்துவிட்டன. ஆனாலும் அவரது விடுதலை நிச்சயமற்றதாகவே உள்ளது.

வீ.செந்தமிழ் செல்வன்

சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி. எழுவர் விடுதலையே, இனத்தின் விடுதலை!

Kavitha Muralidharan

பேரறிவாளனின் விடுதலை நீதி காட்டும் கருணை அல்ல, செய்ய வேண்டிய கடமை.

Ashik Rahman Din

கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள். அந்த நம்பிக்கைக்கு மதிப்பளித்து சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்.

Pragash

30 வருட வேதனையை வார்த்தைகளில் விளக்க முடியவில்லை வலியைக் குணப்படுத்துவதற்கான ஒரே வழி, பேரறிவாளனின் விடுதலை..

குணசேகரபாண்டியன்

29 ஆண்டுகளை கடந்தும் கொடுஞ்சிறைவாசம் இனியும் தொடர வேண்டுமா? முதல்வர் அவர்களே இனியும்காலம் தாமதிக்காமல் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை உறுதி செய்யுங்கள்.

அம்பலூர் எழில் இராவணன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ’சின்ன விசாரணை தான்’ என்று சொல்லி பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகள் ஆகின்றன.

ஜீவா

உங்கள் அரசியல் நாடகங்களை அரங்கேற்ற இதுவல்ல நேரம். உடனே எழுவர் விடுதலை சாத்தியப்படுத்துங்கள்.

prasanth selvam

ஒரு தாயோட  அழுகுரல் கேட்௧லையா?.. இன்னும் எத்தனை வருடம் தேவைப்படும் அவர்களை விடுதலை செய்ய. பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com