ஜனவரியில் மூன்றாவது குழந்தை:  மகிழ்ச்சியில் செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதி

ஜனவரியில் மூன்றாவது குழந்தை: மகிழ்ச்சியில் செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதி

ஜனவரியில் மூன்றாவது குழந்தை: மகிழ்ச்சியில் செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதி
Published on

இயக்குநர்கள் செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிக்கு வரும் ஜனவரியில் மூன்றாவது குழந்தை பிறக்கவிருக்கிறது, என்பதை கீதாஞ்சலி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் தான் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துகொண்டனர். இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன்.

ஏற்கனவே, இந்தத் தம்பதிக்கு லீலாவதி என்ற மகனும் ஓம்கார் என்ற மகனும் உள்ள நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பிணியாகியிருக்கிறார், கீதாஞ்சலி செல்வராகவன். மூன்று வாரங்களுக்கு முன் வயிறு பெரிதாக உள்ள தன்னுடையை படத்தை பகிருந்து கர்ப்பிணியாக உள்ளதை உறுதிப்படுத்தினார்.

இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “வரும் ஜனவரியில் மூன்றாவது குழந்தை பிறக்கப்போகிறது. அதன் வருகைக்காக நான், லீலாவதி, ஓம்கார், செல்வராகவன் மற்றும் நான் காத்திருக்கிறோம்” என்று மகிழ்ச்சியோடு ட்விட் செய்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com