தோனி முதல் கோலி வரை : அணிக்காக சம்பளத்தை குறைத்துக் கொண்ட ‘விஸ்வாசம் மிக்க வீரர்கள்’!

தோனி முதல் கோலி வரை : அணிக்காக சம்பளத்தை குறைத்துக் கொண்ட ‘விஸ்வாசம் மிக்க வீரர்கள்’!
தோனி முதல் கோலி வரை : அணிக்காக சம்பளத்தை குறைத்துக் கொண்ட ‘விஸ்வாசம் மிக்க வீரர்கள்’!

ஐபிஎல் ரீடன்ஷன் முடிந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தாங்கள் எப்போதுமே வழக்கமாக விளையாடி வரும் பிரான்சைஸ் அணிக்காக தங்களது சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளனர் ‘தன்னலமில்லா கிரிக்கெட் வீரர்கள்’ சிலர். இந்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கோலி உட்பட இரண்டு வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். 

வழக்கமாக பிரான்சைஸ் கிரிக்கெட்டில் ஒரு வீரரை தக்க ஒரு அணி அடுத்த சீசனுக்கும் தக்க வைத்துக் கொள்கிறது என்றால் அவருக்கான சம்பளத்தை முன்பை காட்டிலும் கூடுதலாக வழங்கும். ஆனால் இந்த வீரர்கள் அதற்கு மாற்றாக தங்களது சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளார். பணத்தை விடவும் தங்களுக்கு தாங்கள் சார்ந்துள்ள அணியே முக்கியம் என்பதை தங்களது செயல் மூலம் வெளிப்படுத்தியுள்ள இந்த வீரர்கள் குறித்து பார்ப்போம். 

தோனி!

சென்னை அணியின் தலைவரான மகேந்திர சிங் தோனி 2022 ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக விளையாட பெறும் தொகை 12 கோடி ரூபாய். 2021 சீசனில் அவருக்கு 15 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. தனது சம்பளத்தில் 20 சதவிகிதத்தை விட்டுக் கொடுத்துள்ளார் தோனி. 

கோலி!

ஷார்டர் பார்மெட் கிரிக்கெட்டில் கேப்டன் பொறுப்பே வேண்டாம் என சொல்லி உள்ளார் கோலி. இது ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட 2022 சீசனில் அவருக்கு 15 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது. 2021 சீசனில் 17 கோடி ரூபாய் பெற்றிருந்தார் அவர். 

கிளேன் மேக்ஸ்வெல்!

கிரிக்கெட் உலகின் ‘பிக் ஷோ’ என அழைக்கப்படும் ஆஸ்திரேலிய நாட்டு வீரர் மேகஸ்வெல் தனது சம்பளத்தில் 23 சதவிகிதத்தை குறைத்துக் கொண்டுள்ளார். கடந்த பிப்ரவரி வாக்கில் நடைபெற்ற மினி ஐபிஎல் ஏலத்தில் 14.50 கோடி ரூபாய்க்கு பெங்களூர் அணி அவரை வாங்கி இருந்தது. இந்த நிலையில் 2022 சீசனில் மீண்டும் பெங்களூர் அணிக்காக விளையாட வெறும் 11 கோடி ரூபாய் மட்டும் பெற்றுக் கொள்கிறார் அவர். 

சுனில் நரைன்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிரதான வீரர்களில் ஒருவர் சுனில் நரைன். தனது சுழற்பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் வல்லவர். சமயங்களில் பேட்டிங்கிலும் பட்டையை கிளப்புவார். இவர் 2022 சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாட வெறும் 6 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார். 2021 சீசனில் அவருக்கு 8.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 

இது ஒருபுறம் புதிதாக சேர்க்கப்பட்டவுள்ள இரண்டு அணிகள் உட்பட வெளியில் இருந்து அதிக விலைக்கு கேட்கப்பட்ட போதும் சில வீரர்கள் தங்கள் இருந்த அதே அணியில் இருக்க விருப்பம் தெரிவித்தனர். ஏற்கனவே எடுக்கப்பட்ட விலையை விட சற்று கூடுதலாக வழங்கி சிலரை சில அணிகள் தக்க வைத்துள்ளனர். ஜடேஜா, முகமது சிராஜ் உள்ளிட்டோர் அதில் அடங்குவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com