பட்ஜெட் போனில் சாதிக்குமா மைக்ரோமேக்ஸ்? எப்படி இருக்கிறது Micromax In Note 1?

பட்ஜெட் போனில் சாதிக்குமா மைக்ரோமேக்ஸ்? எப்படி இருக்கிறது Micromax In Note 1?
பட்ஜெட் போனில் சாதிக்குமா மைக்ரோமேக்ஸ்? எப்படி இருக்கிறது Micromax In Note 1?

செல்போன் உலகில் ஐபோன், சாம்சங், ஒன் ப்ளஸ் உள்ளிட்ட சில போன்கள் பாதுகாப்பு அம்சங்கள், உயர் ரக தொழில்நுட்பங்கள் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. அதற்கு ஏற்ப அந்த போன்களின் விலையும் உள்ளது. அதேநேரத்தின் மீடியமான தொழில்நுட்பங்கள், இது போதும் என்ற அளவிலான சிறப்பம்சங்களை மையமாக வைத்து சந்தையில் பல போன்கள் உள்ளன.

அதில் ரியல்மி, ரெட்மி,ஓப்போ உள்ளிட்ட பல நிறுவனங்கள் பட்ஜெட் போன்களை சரமாரியாக ரிலீஸ் செய்து வருகின்றன. அந்த வரிசையில் ஏற்கெனவே இந்தியாவில் போன் விற்பனையில் அறிமுகம் பெற்றிருந்த மைக்ரோமேக்ஸ், தன்னுடைய ரீ என்ரியை கொடுத்துள்ளது. பல நிறுவனங்கள் பட்ஜெட் போன்களை போட்டிப்போட்டுக்கொண்டு வெளியிடும் நேரத்தில் தன்னுடைய Micromax In Note 1 மூலம் களத்தில் குதித்துள்ளது மைக்ரோமேக்ஸ்.

In என்ற லோகோவுடன் ஸ்டைலாக அமைந்துள்ளது இந்த மாடல். இது இந்தியாவில் உருவாக்கப்படும் போன் வகை. இந்திய செல்போன் ரசிகர்களை பொருத்தவரை பெரிய டிஸ்பிளே, சிறந்த கேமரா என்பதே அவர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கும். இந்த போன் அந்த தேவையை பூர்த்தி செய்யும் என்றே தெரிகிறது.

6.67 இஞ்ச் கொண்ட டிஸ்பிளே கொண்டுள்ளது. மார்க்கெட்டில் இந்த போன் கிடைக்கப்போகும் விலையோடு ஒப்பிட்டு பார்த்தால் பெரிய டிஸ்பிளே கொண்ட போன் இதுவே. முன்பக்க செல்ஃபி கேமரா செல்போனின் நடுவே ஹோல்-பஞ்ச் மாடலில் அமைக்கப்பட்டுள்ளது. HD ரெசொலேஷன்ஸ் கிளாரிட்டியை இந்த கேமரா வழங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இத்தனை பெரிய டிஸ்பிளே கொண்ட போனை ஒருகையில் வைத்துக்கொண்டு பயன்படுத்த முடியுமா என்பது சந்தேகம் தான்.

பளபளப்பான லுக்கில் இருந்தாலும் இந்த போனானது பிளாஸ்டிக் மூடி தான். தற்போது வரும் போன் வகைகளை போலவே C டைப் யூஎஸ்பி போர்ட். 4ஜிபி ரேமில் கிடைக்கும் இந்த போன் இரண்டு வகை ஸ்டோரேஜ் மாடல்களை கொண்டுள்ளது. அதன்படியே விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 64ஜிபியானது 10,999 ரூபாயாகவும், 128 ஜிபியானது 12,499 ரூபாயாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. MediaTek Helio G85 புராசெஸ்சர் கொண்டுள்ளது. 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளதால் நீண்ட நேரம் சார்ஜ் இருக்கும் வகையிலும், உடனடியாக சார்ஜ் ஏறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

கேமராவை பொருத்தவரை 48 மெகா பிக்ஸல் பிரைமரி கேமரா, 5 மெகா பிக்ஸல் அல்ட்ரா-வைட் கேமரா, 2 மெகா பிக்ஸ்ல் மேக்ரோ கேமரா மற்றும் 2 பிக்ஸல் டெப்த் சென்சார் கேமராவை கொண்டுள்ளது.

Source & Photos: Ndtv/Aditya  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com