ஃபேஸ்புக்கின் புதிய ப்ரைவஸி ஆப்ஷன்..!!

ஃபேஸ்புக்கின் புதிய ப்ரைவஸி ஆப்ஷன்..!!
ஃபேஸ்புக்கின் புதிய ப்ரைவஸி ஆப்ஷன்..!!

உலகிலுள்ள கோடிக்கணக்கான மக்களை கவர்ந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் புதிய ப்ரைவஸி ஆப்ஷனை தரவுள்ளது.

உலகளாவில் சமூகவலைத்தளங்களில் நம்பர் 1 ஆக திகழும் பேஸ்புக் செயலியின் பயனாளர்கள், நாளுக்கு நாள் மக்களின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். அதற்கேற்ப ஃபேஸ்புக் செயலியும் புதிய புதிய அப்டேட் வசதிகளுடன் வளர்ச்சியடைந்துக் கொண்டே வருகிறது. பேஸ்புக்கின் இந்தப் புதுமையால்தான், பயனாளர்கள் இன்று வரை பேஸ்புக்கை தவிர மற்ற எந்தச் செயலியின் மீது அதிக ஈடுபாட்டை காட்டுவதில்லை என்கின்றன பல ஆய்வின் முடிவுகள். இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில், நியூஸ்ஃபிட் பக்கத்தில் சில மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக அறிவித்திருந்தது.

இதன்மூலம், ஃபேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தனியார் செய்தி நிறுவனங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார். இனிவரும் காலங்களில் நியூஸ்ஃபிட் பக்கத்தில் புதிய மாற்றங்கள் பல நிகழ இருப்பதாகவும், செய்தி நிறுவனங்களில் அதிகப்படியான வீடியோக்கள் மற்றும் தேவையற்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் குறைக்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. மார்க்கின் இந்த அறிவிப்புக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அதன்பின் ஃபேஸ்புக்கின் ப்ரைவஸி ஆப்ஷனில் புதிய அப்டேட் வர இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளன. தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஃபேஸ்புக் வெர்ஷனில், பயனாளர்கள் பதிவிடும் ஃபோட்டோக்கள், செய்திகள், கருத்துகள் ஆகியவற்றை மாற்றங்கள் செய்துகொள்ளாம். அதே நேரத்தில், பயனாளர்கள் போஸ்ட் செய்யும் தங்களின் வீடியோக்கள், புகைப்படங்களை தங்கள் நண்பர்கள் மட்டும் பார்த்தால் போதும் என தேர்வு செய்யும் வசதிகள் ஏற்கனவே பேஸ்புக்கில் இருந்தாலும் அதுபோன்ற ஆப்ஷங்கள் தனித்தனியாகவே இருந்தன. இப்பொழுது இந்த ஆப்ஷனை ப்ரைவஸி பக்கத்தில் தனியாக இடம்பெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் விளம்பரங்களை தனித்து காட்டுவது போன்ற அப்டேட்டும் விரைவில் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஃபேஸ்புக் உபயோகிக்கும் பெண்கள் தனது புகைப்படங்களை பாதுகப்பாக வைத்துகொள்ள முடியும். தனக்கு வேண்டிய நண்பர்களுக்கு மட்டும் தனது புகைப்படகள் மற்றும் வீடியோக்களை பார்ப்பது போல் பேஸ்புக்கில் பதிவு செய்துகொள்ளாம். முதலில் இந்த ப்ரைவஸி ஆப்ஷனை இந்தியா மற்றும் சில நாடுகள் மட்டும் பயண்படுத்திகொள்ள வசதிகள் செய்து தரப்படவுள்ளது 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com