சருமப் பராமரிப்பு பொருட்கள் பற்றிய குழப்பங்கள், பிரச்னைகள்.. தீர்வு என்ன? - #ExpertAdvice

சருமப் பராமரிப்பு பொருட்கள் பற்றிய குழப்பங்கள், பிரச்னைகள்.. தீர்வு என்ன? - #ExpertAdvice

சருமப் பராமரிப்பு பொருட்கள் பற்றிய குழப்பங்கள், பிரச்னைகள்.. தீர்வு என்ன? - #ExpertAdvice
Published on

சரும பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகமாகவே இருக்கிறது. அனைவருக்குமே ஆரோக்கியமான பளபளப்பான சருமம் வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலானோர் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வலம்வருகிற சரும பராமரிப்புப் பொருட்களை கண்மூடித்தனமாக வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ஆனால் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கிறதா என்றால், பெரும்பாலானோர் சொல்லும் பதில் இல்லை என்பதுதான்.

அந்தப் பொருள் குறித்தும், அது நமது சருமத்திற்கு ஏற்றதா என்பது குறித்தும் தெளிவான விவரமின்மைதான் இதற்கு காரணம் என்கிறார் சரும நிபுணர் கீத்திகா. மேலும், சருமத்திற்கு ஏற்றப் பொருட்களை வாங்குவதற்கு முன்பு, பேட்ச் டெஸ்ட்(patch test) செய்வது அவசியம் என்கிறார் அவர். என்னென்ன மாதிரியான சரும பிரச்னைகளுக்கு எந்தப் பொருட்களை பயன்படுத்தலாம் என்பது குறித்தும் அவர் விளக்கியிருக்கிறார்.

வைட்டமின் சி மற்றும் ஃபெருலிக் அமிலம்(Ferulic Acid) காம்பினேஷன்

பொதுவான அனைத்து ஆன்டி ஏஜிங் சரும பராமரிப்பு பொருட்களிலும் வைட்டமின் சி சேர்க்கப்படுகிறது. ஃபெருலிக் அமிலமும் வைட்டமின் சியைப் போன்றே ஆண்டி ஆக்சிடன்டுகள் நிறைந்தது.

வைட்டமின் சி மற்றும் எஸ்.பி.எஃப்(SPF)

SPF(Sun Protection Factor) என்பது சன்ஸ்க்ரீன்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள். SPF அதிகமாக இருக்கும் சன்ஸ்க்ரீன்கள் தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து அதிக பாதுகாப்பை அளிக்கிறது. வைட்டமின் சி மற்றும் அதிக SPF கொண்ட சன்ஸ்க்ரீன்கள் சரும செல்களை சேதமடையாமல் தடுக்கிறது.

நியாசினமைடு (Niacinamide) மற்றும் சாலிசிலிக் அமிலம் (salicylic acid)

நியாசினமைடு என்பது வைட்டமின் பி-3இன் ஒரு வடிவம். இதுவும் சரும பாதுகாப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதேபோல் சாலிசிலிக் அமிலம் என்பது ஒருவகை பீட்டா ஹைட்ராக்ஸி அமிலம். இது சரும அழற்சியை தடுக்கிறது. இவை இரண்டும் சேர்ந்த பராமரிப்புப் பொருட்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ரெட்டினால் (Retinol)மற்றும் ஹைலுரானிக் அமிலம் (Hyaluronic acid)

சருமத்தின் மேற்பகுதி, சரும நிறம் மற்றும் பருக்களுக்கு எதிராக ரெட்டினால் செயல்படுகிறது. ஹைலுரானிக் அமிலம் சருமத்தை மென்மையாக்குகிறது.

ஹைலுரானிக் அமிலம் மற்றும் நியாசினமைடு

இரண்டுமே திரவம் சார்ந்தவை என்பதால் சருமத்திற்கு சிறந்த நீரேற்றத்தைத் தந்து சருமம் வறட்சியாவதை தடுக்கிறது. சரும பிரச்னைகளுக்கு ஏற்ப இந்த காம்பினேஷன்களில் சரும பராமரிப்புப் பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும் என்கிறார் சரும நிபுணர் கீத்திகா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com