ஈரோடு இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை! இதுவரை மனுத்தாக்கல் செய்தவர்கள் யாரெல்லாம்?

ஈரோடு இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை! இதுவரை மனுத்தாக்கல் செய்தவர்கள் யாரெல்லாம்?
ஈரோடு இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை! இதுவரை மனுத்தாக்கல் செய்தவர்கள் யாரெல்லாம்?

ஈரோடு இடைத்தேர்தலில் தாக்கலான 96 மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது.

கடும் குளிரிலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் களம். நேற்றோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு களம் காண்கிறார். தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

பாமக இந்த தேர்தலில் போட்டியில்லை என அறிவித்த நிலையில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்துள்ளது. இதையடுத்து நேற்றோடு வேட்பு மனு தாக்கல் நிறைவுற்ற நிலையில். மொத்தம் 96 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது.

இதையடுத்து அ.தி.மு.க. ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகனும், அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாத்தும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று அந்த கட்சிகளின் தலைமை அறிவித்துள்ளது. எனவே அவர்கள் இருவரும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற உள்ளனர். இன்று நடைபெறும் வேட்பு மனு பரிசீலனையைத் தொடர்ந்து வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும். எனவே அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com