தேர்தல் 2021: பல கட்சிகளும் அலங்கரிக்கப்போகும் 16-வது தமிழக சட்டமன்றம்

தேர்தல் 2021: பல கட்சிகளும் அலங்கரிக்கப்போகும் 16-வது தமிழக சட்டமன்றம்

தேர்தல் 2021: பல கட்சிகளும் அலங்கரிக்கப்போகும் 16-வது தமிழக சட்டமன்றம்

கடந்த 2016 தேர்தலில் நான்கு கட்சிகள் மட்டுமே இடம்பிடித்த தமிழக சட்டமன்றத்தில், இப்போது 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம்பெறவுள்ளன.

2016-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் 15-வது சட்டமன்றத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல் ஆகிய நான்கு கட்சிகள் மட்டுமே இடம்பெற்றது. இதில் அதிமுக 134 இடங்களிலும், திமுக 89 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றிபெற்றிருந்தனர். நீண்ட காலங்களுக்கு பின்னர் கம்யூனிஸ்ட்கள் உட்பட அதிக கட்சிகள் இடம்பெறாத சட்டசபையாக 15-வது சட்டசபை இருந்தது.

தற்போது நடந்து முடிந்துள்ள 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகளும் சட்டமன்றத்தை அலங்கரிக்கவுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், சிபிஎம் 2 இடங்களிலும், சிபிஐ 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளான மதிமுக நான்கு இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களும், கொங்கு மக்கள் தேசிய கட்சி 1 இடத்திலும், தமிழக வாழ்வுரிமை கட்சி 1 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது. அதைப்போலவே அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக 5 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சி 1 இடத்தில் வென்றுள்ளது.  இதன் மூலமாக தனிச்சின்னத்தில் போட்டியிட்ட 8 கட்சிகளும், கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட 5 கட்சிகளும்  என மொத்தம் 13 கட்சிகள் சட்டமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த சட்டமன்றத்தில் பல்வேறு கட்சிகளும் இடம்பெறுவதால்  பலவகை கருத்துகளும், ஆக்கப்பூர்வமான விவாதங்களும் , மக்கள் பிரச்னைகளும் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. அறுதி பெரும்பான்மையை பெற்ற திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com