ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கடிதம்: ரூ.35 லட்சத்துக்கு ஏலம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கடிதம்: ரூ.35 லட்சத்துக்கு ஏலம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கடிதம்: ரூ.35 லட்சத்துக்கு ஏலம்
Published on

உலகம் வியக்கும் இயற்பியல் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.35 லட்சத்துக்கு அமெரிக்காவில் ஏலத்தில் எடுக்கப்பட்டது.

மின்னியல் கோட்பாடு மற்றும் அதன் சிறப்பு சார்பியல் குறித்து ஐன்ஸ்டீனின் அறிவியல் ஆசிரியர் ஆர்தர் கன்வெர்ஸ் 1953-இல் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்து ஐன்ஸ்டீன் அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இந்தக் கடிதம், நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நேட் டி சாண்டர்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. ஆரம்பத் தொகையாக சுமார் ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கடிதத்தை ஏலத்தில் எடுக்க பலர் போட்டியிட்ட நிலையில், கடைசியாக ரூ.35 லட்சத்துக்கு ஏலம் போனது.

ஐன்ஸ்டீனின் கடிதத்தைக் குறித்து பேசிய நேட் டி சாண்டர்ஸ் ஏல நிறுவனத்தின் உரிமையாளர் நேட், ”ஐன்ஸ்டீன் கேள்விகளின் மீதான விவாதத்திலும், அதற்கு சரியாக பதில்களைத் தருவதிலும் மிக சிறப்புடனும் நன்மதிப்புடனும் நடந்துகொண்டார் என்பது தெளிவாகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com