பந்த் பாதிப்பு: 17 கி.மீ சைக்கிளில் சென்று சிகிச்சை அளித்த ’ஆஹா’ டாக்டர்!

பந்த் பாதிப்பு: 17 கி.மீ சைக்கிளில் சென்று சிகிச்சை அளித்த ’ஆஹா’ டாக்டர்!

பந்த் பாதிப்பு: 17 கி.மீ சைக்கிளில் சென்று சிகிச்சை அளித்த ’ஆஹா’ டாக்டர்!
Published on

‘இன்னைக்கு பந்த். பஸ் இல்ல, வண்டி இல்ல, வர வாய்ப்பில்லை’- முழு அடைப்பு என்றால் இப்படி ஏதாவது காரணம் சொல்லி, வேலையை கட் அடிப்பதுதான் பலரது வேலை. ஆனால்,  தனது பொறுப்பை உணர்ந்து 17 கி.மீ சைக்கிளில் சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கும் ஒரு ஆஹா அரசு டாக்டரை கொண்டாடுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் இந்து அமைப்புகள் நேற்று முழு அடைப்பு போராட் டத்தை நடத்தின. இதில் பல பகுதிகளில் வன்முறை. பலர் படுகாயமடைந்தனர். பேருந்துகள், கார்கள் அடுத்து நொறுக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் அலுவலகங்கள் தீ வைக்கப்பட்டன. இதனால் பல இடங்களில் போக்குவரத்துக்குத் தடை. பயணிகள் பாதிக்கப்பட்டனர். யாரும் எங்கும் செல் ல முடியவில்லை. 

இதில், அரசு மருத்துவமனை டாக்டர் சதீஷ் பரமேஸ்வரனும் சிக்கிக்கொண்டார். திருச்சூரில் உள்ள செல்லக்காரா பகுதியை சேர்ந்த இவர், காவாசேரியில் இருக்கும் அரசு மருத்துவமனை டாக்டர்! செல்லக்காராவுக்கும் காவாசேரிக்குமான தூரம் 17 கி.மீ. இவருக்காக தினமும் காலை யிலேயே ஏராளமான நோயாளிகள் காத்திருப்பார்கள்.

என்ன செய்வதென்று யோசித்தார் டாக்டர் சதீஷ். சத்தம் போடாமல் சைக்கிளை எடுத்துகொண்டு அழுத்தத் தொடங்கினார். வியர்த்து விறு விறுத்து மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு எதிர்பார்த்தது போலவே, காத்திருந்தனர் ஏராளமான நோயாளிகள். ‘’எங்க, வராமா போயிரு வீங்களோன்னு பயந்துட்டு இருந்தோம்’’ என்று சில நோயாளிகள் சொல்ல, அவர்களுக்கு சிகிச்சை அளித்து மாத்திரைகளை வழங்கி இருக்கிறார் சதீஷ்.

இதுகுறித்து டாக்டர் சதீஷிடம் கேட்டால், ‘’சாதாரணமானவங்க அரசு மருத்துவமனைய தேடிதான் சிகிச்சைக்கு வர்றாங்க. அவங்களுக்கு எங்க ளை போல இருக்கிற சில டாக்டர்கள்தான், ஒரே நம்பிக்கை. அந்த நோயாளிகளை பத்தி நினைச்சதும் என்னால வீட்ல இருக்க முடியல. சைக்கி ள்ல ஏறி உட்கார்ந்துட்டேன்’’ என்கிறார், புன்னகைத்துக் கொண்டே. 

முழு அடைப்பில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், முந்தைய நாள் இரவில், சதீஷ் காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது மறித்துள் ளனர். அவரை அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் கடுப்பான டாக்டர். சதீஷ், அவர்களின் வெறுப்பு பேச்சுக் காரணமாக மனவருத்தம் அடைந் ததாகக் கூறுகிறார். 

இதற்கு முன்பும் இப்படியொரு சேவையை செய்திருக்கிறார், டாக்டர் சதீஷ். கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது, 15 கி.மீ தூரத்தில் உள்ள நெல்லியம்பதிக்கு நடந்தே சென்று சிகிச்சை அளித்திருக்கிறார். இந்த ’ஆஹா’ டாக்டர் செண்டமேளக் கலைஞரும் கூட!

இவரது சேவைக்காக, சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகிறது பாராட்டுகள்  

நன்றி: செய்தி, புகைப்படங்கள், மாத்ருபூமி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com