இறந்த பிறகு உடலை எரிக்கும் அல்லது புதைக்கும் வழக்கம் பல சமூகங்களிடையே இருக்கிறது. இப்போது உடலை கரைக்கும் விதமாக புதிய வழிமுறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் காரத்தன்மையுடைய திரவத்தில் சடலத்தைக் கரைக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். விரைவில் அந்த தொழில்நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது. இதற்கு அல்கலைன் ஹைட்ரோலிசிஸ் என கூறுகின்றனர். அதாவது பசுமைத் தகனம்.
இறந்த பிறகு எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. புதைத்தால் இடப்பற்றாக்குறை போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக பொட்டாசியம் ஹைட்ராக்சைட் கொண்ட காரத்தன்மையுள்ள திரவத்தில் உடல் வைக்கப்படும்போது, எலும்புகளைத் தவிர அனைத்தும் கரைந்து, எலும்புக்கூடு மட்டுமே மிதக்கும் முறையை அறிவியல் வல்லுனர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
90 நிமிடங்களிலேயே உடல் கரைந்துவிடுகிறது. இம்முறைப்படி, உடல் மக்கப் போவதும் இல்லை, தீயில் கருகப் போவதும் இல்லை, மேஜிக் போன்று காணாமல் போகிறது. பொதுமக்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக எத்தனை பேர் இந்தப் பசுமை தகனத்தை விரும்புவார்கள் என்பது கேள்விக் குறியே. இதற்கு இந்திய மதிப்பில் ரூ.5 கோடி செலவாகுமாம்.

