ஒரே இரவுல ரூபாய் செல்லாதுன்னு சொல்லும் அரசால பைரசியை ஒழிக்க முடியாதா?

ஒரே இரவுல ரூபாய் செல்லாதுன்னு சொல்லும் அரசால பைரசியை ஒழிக்க முடியாதா?

ஒரே இரவுல ரூபாய் செல்லாதுன்னு சொல்லும் அரசால பைரசியை ஒழிக்க முடியாதா?
Published on

ஒரே இரவில் ரூபாய் செல்லாது என்று அறிவிக்கும் அரசால் திருட்டி விசிடியை ஒழிக்க முடியுதா? என இயக்குனர் சுசி. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான, ’விக்ரம் வேதா’, ’மீசைய முறுக்கு’ படங்களுக்கு நல்ல ஓபனிங் கிடைத்திருக்கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் டிக்கெட் விலை அதிகரித்துள்ள நிலையில் சினிமா படங்களுக்கான வரவேற்பு குறையும் எனக் கூறப்பட்ட நிலையில் இந்தப் படங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு, திரையுலகை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 

இதுபற்றி இயக்குனர் ஜனநாதனிடம் கேட்டபோது, ’இன்னைக்கு சமூக வலைத்தளங்களின் புரமோஷன் முக்கியமா இருக்கு. ஒரு ஷோ ஓடி முடியறதுக்குள்ள ஆட்களை தியேட்டருக்கு மீண்டும் கொண்டு வர்றதுக்கு அதோட பங்கு அதிகம். அதே போல ரசிகர்கள் தரமான படங்கள்னா,
பணம் பற்றிக் கவலைப்படாம, பார்க்க ரெடியா இருக்காங்க. அதே நேரம் ஜிஎஸ்டி வரியை குறைக்கணுங்கறதுல மாற்றுக் கருத்து இல்லை. இந்த தொழில் நஷ்டத்துல இயங்கிட்டு இருக்கு. இந்த தொழிலை வரியை குறைச்சு அரசு நெறிப்படுத்தினா, நல்லா இருக்கும்னு நினைக்கிறோம்’ என்கிறார்.

’சமீபகாலமா டல்லா இருந்த சினிமா துறையை கலகலப்பா மாற்றியிருக்கார் விஜய் சேதுபதி’ என்கிறார் இயக்குனர் சுசி கணேசன். அவர் கூறும்போது, ’ஜிஎஸ்டிக்கும் படங்களோட கலெக்‌ஷனுக்கும் சம்மந்தமில்லை. நல்ல பொருளா கொடுத்தா, வாங்கறதுக்கு மக்கள் ரெடி. இது
சினிமாவுக்கு மட்டுமல்ல. எல்லாத்துக்கும்தான். ஆனா சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி அதிகம். ஒரு டோல்ல காருக்கு 50 ரூபாய் வாங்குறான்னா, அவன் அந்த ரோடை பராமரிச்சு வச்சிருக்கான். சினிமாவுக்கு அரசு என்ன பண்ணுச்சு? ஒரே நாள்ல ரூபாய் நோட்டுகளை செல்லாததா அறிவிக்கிற அரசால, பைரசியை ஒழிக்க முடியாதா? இந்த வசதியை சினிமாவுக்கு பண்ணிட்டு வரியை வாங்கினாலே சந்தோஷம்தான்’ என்கிறார் ஆவேசமாக.

இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது, ’ஒரு படத்தோட வெற்றிக்கு கதை ஒரு காரணம். இன்னொரு காரணம், நாயகத்தன்மை. எல்லா படங்களும் வெற்றிபெறணும் அப்படிங்கறதுதான் என் ஆசை. ஏன்னா, ஒரு திரைப்படத்துக்கு பின்னால பல பேரோட உழைப்பு கொட்டிக் கிடக்கு.
அவ்வளவு உழைப்புக்கும் பலன் கிடைக்கணும்’ என்கிற அவர், ஜிஎஸ்டி வரி விதிப்பால் பாதிக்கப்படுவது சிறுபட்ஜெட் படங்கள்தான் என்கிறார்.
‘வரி எல்லா காலத்துலயும் இருக்கு. ஆனா, இன்றைய வரி விதிப்பு அதிகம். ஒரு சிறு பட தயாரிப்பாளர் பைனான்ஸ் வாங்கி படம் எடுக்கிறார். அதுல வேலை பார்க்கிற எல்லா கலைஞர்களுக்கும் வரி புடிச்சுட்டு பணம் கொடுக்கிறார். அந்தப் படம் உற்பத்தியாயிடுது. அது வியாபாரத்துக்கு ரெடி. ஆனா, எப்ப விற்கும்னு தெரியல. நிலையற்ற சூழல். பொருள் விற்கலைன்னாலும், கட்டப்பட்ட வரிக்கும் சேர்த்து தயாரிப்பாளர் வட்டிக்கட்டிட்டு இருக்கிறான். விற்கும்போது ஒரு வரி இருக்கு. பிறகு கேளிக்கை வரி. பிறகு ரிலீஸ் ஆகி, ஹிட்டாகணும். இவ்வளவு இருக்கு. அதனாலதான் வரியை குறைக்கச் சொல்றோம். இந்த வரி விதிப்பால டிக்கெட் விலை அதிகரிச்சிருக்கு. அதனால சாமானியனுக்கும் சினிமாவுக்குமான இடைவெளி அதிகமாகுது. அவனை வேறு வழிகள்ல படம் பார்க்கத் தூண்டுது. இணைய தளங்களிலோ திருட்டு விசிடியிலோ அவன் படம் பார்க்க, வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறோம். அதனாலதான் அரசு கரிசனையோடு இந்த வரிவிதிப்பை கவனத்துல எடுக்கணும்னு சொல்றோம்’ என்கிறார்.

‘இந்த இரண்டு படங்களும் ஓடறதால அதோட ஜிஎஸ்டியை ஒப்பிட வேண்டாம். நல்ல கதைகள் இருந்தா கண்டிப்பா ரசிகர்கள் படம் பார்க்க வருவாங்க. ’விக்ரம் வேதா’ படத்துல விஜய் சேதுபதி, மாதவன்னு ரெண்டு ஹீரோக்கள் இருக்காங்க. ஆதி, ஜல்லிகட்டு விவகாரத்துல பிரபலமானவர். அதனால அவங்க படங்களுக்கு ஓபனிங் கிடைச்சிருக்கு. ஆனா, சென்னை தாண்டி இருக்கிற தியேட்டர்கள்லதான் பிரச்னை. மால் தியேட்டர்கள் இல்லாத இடங்கள்ல அதிக டிக்கெட் கட்டணம் கொடுத்து படம் பார்க்க ரசிகர்கள் தயாரா இல்லை. அதோட சின்ன பட்ஜெட் படங்கள் ஜிஎஸ்டியால் அதிகமா பாதிக்கப்படும்’ என்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com