மம்தாவின் சேலை குறித்த சர்ச்சை கருத்து: இந்திய ஆண் அரசியல்வாதிகளின் பார்வைக் 'கோளாறு'!

மம்தாவின் சேலை குறித்த சர்ச்சை கருத்து: இந்திய ஆண் அரசியல்வாதிகளின் பார்வைக் 'கோளாறு'!
மம்தாவின் சேலை குறித்த சர்ச்சை கருத்து: இந்திய ஆண் அரசியல்வாதிகளின் பார்வைக் 'கோளாறு'!

தமிழகத் தேர்தல் களத்தில் பரப்புரையில் சர்ச்சைகள் எழுந்ததை அறிவோம். இதேபோல், மேற்கு வங்கத் தேர்தல் களத்திலும் சர்ச்சைக்குரிய பேச்சுகளும் சலசலப்புகளும் நிகழ்கின்றன. குறிப்பாக, பெண் வாக்காளர்களை நெளியவைக்கும் பரப்புரை சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அதுகுறித்து 'தி பிரின்ட்' செய்தித் தளத்தில் சுபாங்கி மிஸ்ரா எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது...

மேற்கு வங்க வெற்றிக் கணிப்புகள் ஒருபுறம் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், பாஜக தலைவர்களின் சர்ச்சைப் பேச்சுகள், அம்மாநில பெண்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் பிரசார கூட்டம் ஒன்றில் பேசும்போது, "மம்தா பானர்ஜி ஏன் சேலை கட்டிக்கொண்டு வருகிறார். பேசாமல் பெர்முடாஸ் டவுசர் அணிந்துகொண்டு வரவேண்டியது தானே?" என முகம் சுழிக்கும் வகையில் பேசியிருக்கிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் எப்படி சேலை அணியவேண்டும், எந்த வகையான ஜீன்ஸ் அணிய வேண்டும் போன்ற பேச்சுகள் தலைவர்களாலேயே உதிர்க்கப்படுகிறது. இது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தின் அவசியத்தைக் காட்டுகிறது. பெண்களை தரக்குறைவாக நினைப்பவர்களால், அவர்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை எப்படி கொடுக்க முடியும் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

அண்மையில் உத்தராகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் ஒரு நிகழ்வில், ஒருவித ஃபேஷனான கிழிந்த தோற்றமுள்ள ஜீன்ஸை (Ripped Jeans) அணியும் பெண்களை 'மோசமான முன்னுதாரணம்' என்று குறிப்பிட்டுப் பேசினார். ஒரு மாநில முதல்வரின் இந்தப் பேச்சு, பெண்கள் குறித்த இந்திய அரசியல்வாதிகளின் மனநிலையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. 'பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்பது குறித்து பேசுவது அரசியல்வாதிகளுக்கு தேவையில்லாத வேலை" என்று சொந்தக் கட்சிக்காரரான ஸ்மிருதி இரானியிடமே கண்டனத்தை பெற்றார் ராவத். பாஜகவில் இருக்கும் ஒருவர் தனது சொந்தக் கட்சிக்காரருக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்த அரிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

பெண் அரசியல்வாதிகளுக்கு எதிராக திரளும் ஆண்கள்!

தீரத் ராவத்தின் ஜீன்ஸ் தொடர்பான கருத்து என்பது இந்திய அரசியல்வாதிகளின் ஒட்டுமொத்த மனநிலையின் பிரதிபலிப்பு. இது முதன்முறை அல்ல என்றாலும், கடைசி தடவையாகவும் இது இருக்க வாய்ப்பில்லை. அவரை விட ஒருபடி மேலே சென்று முகம் சுழிக்கும் வகையில் பேசி, பெண்கள் மீதான பாஜக தலைவர்களின் பார்வையை உறுதிபடுத்தியிருக்கிறார் மேற்கு வங்கத்தின் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ்.

மேற்கு வங்கத்தின் புருலியாவில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில் கோஷ் பேசும்போது "மம்தா ஒரு காலை மூடியும், மற்றொரு காலை திறந்து காட்டும் வகையில் சேலையை அணிந்திருக்கிறார். யாரும் சேலையை இப்படி அணிந்து நான் பார்த்ததில்லை. அப்படி அனைவரும் பார்ப்பதற்காக தனது காலை காட்ட வேண்டுமானால், அவர் பெர்முடா ஷார்ட்ஸை அணிந்து கொள்ளலாம். காரணம், அது அனைவரின் பார்வைக்கும் ஏற்றப்படி இருக்கும்" என்று ஆபாசமாக கருத்துகளை உதிர்த்திருக்கிறார்.

பெண் அரசியல்வாதிகள் பெரும்பாலும், அவர்களின் தோற்றம், உடை காரணமாக ஆண் அரசியல்வாதிகளால் தொடர்ந்து ஆபாச, அறுவறுக்கத்தக்க பேச்சுக்களுக்கு ஆளாகி வருகின்றனர். ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே பெரும்பாலும் அவரது வெளிப்படையான குடிப்பழக்கத்தின் காரணமாக கிண்டல் செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி ஒரு தலித் என்ற காரணத்திற்காக அடிக்கடி அவதூறுகளுக்கு ஆளானார். பாஜகவின் ஓம் பிரகாஷ் சிங் மற்றும் சாத்னா சிங் போன்ற அரசியல்வாதிகள் மாயாவதியின் 'தோற்றம்' மற்றும் அவர் ஆடைகளை மையப்படுத்தியே தாக்கிப் பேசியுள்ளனர்.

ஸ்மிருதி இரானி உருவக்கேலிக்கு ஆளாகியிருக்கிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் கூட்டணியில் இருந்த ஜெய்தீப் கவாடே ஒருமுறை ஸ்மிருதி இரானியின் பொட்டு, அவரது கணவர்களின் எண்ணிக்கையைவிட பெரிதாகி வருவதாகக் கூறினார். ஆண் அரசியல்வாதிகள் நாட்டின் மிக சக்திவாய்ந்த பெண்களைக் கூட விட்டுவைக்காதபோது, சராசரி குடிமக்களுக்கு குறித்து அவர்கள் என்ன எதிர்பார்க்க முடியும்?

"ஒரு பெண் ஒருமுறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானால், நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால், மீண்டும் மீண்டும் பாலியல் வல்லுறவுக்கு ஆளானால் சுயமரியாதைக் கொண்ட எந்தப் பெண்ணும் தற்கொலை செய்கொள்வார்" என்று கேபிசிசி தலைவர் முல்லப்பள்ளி ராம்சந்திரன் 2020 நவம்பரில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க முயற்சித்தபோது கூறியது. நல்ல முறையில் பெண்கள் வளர்க்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்று பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங், ஹத்ராஸ் பாலியல் வழக்கு தொடர்பாக கூறியிருந்தார்.

பாஜக தலைவர் ரஞ்சீத் ஸ்ரீவாஸ்தவாவும் வயல்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது குறித்து தேவையற்ற கருத்துகளை தெரிவித்திருந்தார். "டிவி, சமூக ஊடங்கள் வழியே காதலை குறித்து அறிந்துகொண்ட பெண், ஆண் ஒருவரை பண்ணைக்கு அழைத்து, அழைத்திருக்க வேண்டும். அப்போது அவள் பிடிபட்டிருப்பாள்" என்று வயல்வெளிகளில் நடக்கும் பாலியல் சம்பவங்கள் குறித்து பேசியிருந்தார்.

பாலியல் பலாத்காரத்தை நியாயப்படுத்தும் பெண்களை வெறுக்கும் உயர் சாதி ஆண்கள் முற்போக்கான, பெண்ணிய சட்டத்தை உருவாக்குவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

அண்மையில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட திருநங்கைகள் சட்டம் மற்றும் கருக்கலைப்புச் (திருத்தம்) சட்டம் 2021 போன்ற சில சட்டங்கள் உண்மையில் பெண்களின் சுதந்திரத்துக்கு எதிராகத்தான் இருக்கின்றன. கருக்கலைப்புச் (திருத்தம்) சட்டம் 2021, சட்டரீதியான கருக்கலைப்புகளின் உச்சவரம்பை 24 வாரங்களாக அதிகரித்திருக்கிறது.

ஆனால், பெண்கள் தனது கர்ப்பத்தை கலைப்பது தொடர்பாக சொந்த முடிவுகளை எடுப்பதற்கான எந்தவொரு முழுமையாக அதிகாரமும் இன்னும் வழங்கபடவில்லை. திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019 திருநங்கைகளால் எதிர்க்கப்படுகிறது. பாலியல் ஒதுக்கீட்டு அறுவை சிகிச்சை (எந்த வகையான குறிப்பிடப்படவில்லை) மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஒரு நபரை திருநங்கை என ஒரு மாவட்ட நீதிபதி சான்றளிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இது ஒருவரின் பாலினத்தை சுயநிர்ணய உரிமைக்கான உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறுகிறது.

நாடாளுமன்றத்தில் பெண்களின் போதுமான பிரதிநிதித்துவம் பெறுவது மட்டுமே நாட்டின் பாதி மக்களுக்கு முற்போக்கான சட்டத்தை உறுதி செய்ய முடியும்.

- உறுதுணைக் கட்டுரை: The Print

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com