அறிவியல் கண்டுபிடிப்பு முயற்சிகளுக்காக உயிரையே விலையாய் கொடுத்த 6 விஞ்ஞானிகள்!

அறிவியல் கண்டுபிடிப்பு முயற்சிகளுக்காக உயிரையே விலையாய் கொடுத்த 6 விஞ்ஞானிகள்!
அறிவியல் கண்டுபிடிப்பு முயற்சிகளுக்காக உயிரையே விலையாய் கொடுத்த 6 விஞ்ஞானிகள்!

அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் அவ்வளவு எளிதில் நிகழ்ந்துவிடுவதில்லை. ஒவ்வொரு கண்டுபிடிப்புகளுக்கு பின்னும் ஆண்டு காத்திருப்பும் பல பேரின் உழைப்பும், அறிவும் நிச்சயம் இருக்கும். ஒருவர் தொடங்கி வைத்ததை அதற்கு பின்பு வந்த யாரோ ஒருவர் முடித்து வைத்திருப்பார். ஆனால், தொடங்கியவர் பெயர் வரலாற்றில் இல்லாமல் கூட போயிருக்கும். ஆனாலும், கண்டுபிடிப்பின் மீதுள்ள தங்களது தீராத காதலால் பல அறிஞர்கள் தங்களுடைய வாழ்க்கையே அதற்காக ஒப்படைத்தார். அப்படி, வாழ்க்கையை ஒப்படைத்து கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் பலரும் அவர்களது கண்டுபிடிப்பு பணிகளின் விளைவாகவே மரணிக்கவும் செய்திருக்கிறார்கள். தேசிய அறிவியல் தினமான இன்று அறிவியல் கண்டுபிடிப்பு முயற்சிகளுக்காக உயிரையே விலையாய் கொடுத்த விஞ்ஞானிகள் சிலரை பற்றி பார்க்கலாம்.

இன்று நாம் உண்மையைச் உரக்கச்சொன்னதற்காக இயற்கையாலும் துரோகிகளாலும் கொல்லப்பட்ட விஞ்ஞானிகளைப் பற்றி பார்க்கப்போகிறோம். உண்மையை சொல்வது என்பது உன்னதமான செயல் என்றாலும் சில உண்மைகள் சொல்பவரின் உயிரையே பறித்துள்ளது.

1.கார்ல் ஸ்கீலி

இவர் ஆக்சிஜன் மற்றும் மாலிப்டினம், டங்ஸ்டன், மாங்கனீசு மற்றும் குளோரின் போன்ற பல தனிமங்களைக் கண்டுபிடித்த மேதை. மருந்து வேதியியலாளர். ஆனால், இது OSHA மற்றும் நச்சு இரசாயனங்களான ஹைட்ரஜன் சயனைடு, பாதரசம் போன்ற இரசாயனங்கள் அவரது உடலில் குவியத் தொடங்கி, இறுதியில் அவர் இறந்தார்.


2. மேரி கியூரி

கதிரியக்கத்தின் கண்டுபிடிப்பு, மேரி கியூரி கதிரியக்கத்தைப் பற்றி ஆய்வு செய்ததன் விளைவாக பொலோனியம் மற்றும் ரேடியத்தை கண்டுபிடித்தார். இது நிறைய கதிர்வீச்சுகளை வெளியிட்டது, லுகேமியாவை ஏற்படுத்திய கதிரியக்கமே அவரது மரணத்திற்கு வழிவகுத்தது. அவர் 1934 இல் இறந்தார்.

3.லூயிஸ் ஸ்லோட்டின் மற்றும் எஸ்.ஆலன் க்லைன்

ஒமேகா சைட் எனப்படும் புதிய மெக்சிகோ ஆய்வகத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் புளூட்டோனியம் வெடிகுண்டு வெளியிட்ட அபாயகரமான கதிர்வீச்சால் இறந்தனர். எட்டு விஞ்ஞானிகள் புளூட்டோனியம் வெடிகுண்டில் பணிபுரிந்தனர். அதில் லூயிஸ் ஸ்லோட்டின் மற்றும் எஸ்.ஆலன் க்லைன் ஆகியோர் அடங்குவர். இச்சமயத்தில் ப்ளூட்டோனியம் வெளியிட்ட ஒரு நீல ஒளியானது ஒரு கொடிய கதிர்வீச்சை வெளியிட்டது. இக் கதிர்வீச்சு விஷத்தால் ஸ்லோட்டின் மற்றும் எண்.ஆலன் க்லைன் 9 நாட்களில் இறந்தார்.

4. வில்லியம் புல்லக்

வில்லியம் புல்லக் 1863 ஆம் ஆண்டில் சுழலும் அச்சகம் (rotatory printing press)ஐ கண்டுபிடித்தார். ஆனால் எதிர்பாரா விதமாக 1867 ஆம் ஆண்டில், அவர் தவறுதலாக கியர்களில் தனது காலை வைத்ததால் இயந்திரத்தால் நசுக்கப்பட்டு இறந்தார்.

5. ஃபோர்டு பின்டோ

ஹென்றி ஸ்மோலின்ஸ்கி மற்றும் ஹால் பிளேக். இவர்கள் இறக்கைகள் கொண்ட பறக்கும் காரை (ஏவிஇ மிசார்) கண்டுபிடித்தனர். இந்த காரானது ஹெலிகாப்டர் போல பறக்கக்கூடியது. விமான நிலையங்களுக்கு இடையே நூற்றுக்கணக்கான மைல்கள் பறக்கூடியது. நடுவானில் பறக்கும் போது பறக்கும் காரின் இறக்கைகள் கழன்று விழுந்ததில் இருவரும் இறந்தனர்.

6. ஜார்ஜ் வில்ஹெல்ம் ரிச்மேன்

இடியை ஆராய்ந்தவர் ரஷ்ய இயற்பியலாளர் ஜார்ஜ் வில்ஹெல்ம் ரிச்மேன். 1753ல் மின்னலின் வேகத்தையும் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் வோட்ஸை ஆராயும் போது உயர் அழுத்த மின்னல் அவரை தாக்கி இறந்தார். இது நிச்சயமாக தற்செயலான மரணம்தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com