வாக்குச் சாவடிகள் to திருமண மண்டபங்கள்... இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு கச்சித ப்ளான்!

வாக்குச் சாவடிகள் to திருமண மண்டபங்கள்... இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு கச்சித ப்ளான்!
வாக்குச் சாவடிகள் to திருமண மண்டபங்கள்... இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு கச்சித ப்ளான்!
Published on

வாக்குச் சாவடிகள், திருமண மண்டபங்களை கொரோனா தடுப்பூசி மையங்களாக மாற்றப்படலாம் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக,  வாக்காளர் பட்டியலை வைத்து குறிப்பிட்ட இடங்களில் வாழும் மக்கள்தொகை கணக்கிடப்பட்டு, அந்தந்த வாக்குச் சாவடி மையங்கள் கொரோனா தடுப்பூசி மையங்களாக மாற்றப்படுவது உள்ளிட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.  

கொரோனா தடுப்பூசிப் போடுவதற்கான இடங்களாக வாக்குச்சாவடிகள் முதல் திருமண மண்டபங்கள் வரை மத்திய சுகாதாரத் துறை நிர்வாகிகள் மதிப்பீடு செய்துவருகின்றனர். நாடு முழுவதும் அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் குறைந்தது 30 கோடி மக்களுக்காவது தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் அரசின் ஒரே நோக்கம். தனியார் மருத்துவமனைகளும் நர்ஸிங் ஹோம்களும்கூட தடுப்பூசிகள் போடப் பயன்படுத்தப்படலாம். ஆனால், தடுப்பூசிகளை பாதுகாப்பது முதல், தடுப்பூசிகளை விநியோகிப்பது வரை அனைத்து செயல்முறைகளையும் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டும் என்பதையொட்டி திட்டமிடப்படுகிறது.

இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு மையங்களிலும் குறைந்தது 100 பேருக்காவது தடுப்பூசி போடும் வகையில் அமைக்கப்படும். அதேசமயம் தேர்ந்தடுக்கப்படும் இடங்கள், குறைந்தது 3 அறைகளுடன் கூடிய நல்ல இடவசதியுடன் இருக்கவேண்டும். தடுப்பூசிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போடப்படும்.

குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் மக்கள்தொகை மற்றும் மருந்துகளை கொண்டுசெல்லும் போக்குவரத்து வசதிகளைப் பொறுத்து நிரந்த மையங்கள் அல்லது தற்காலிக மையங்கள் அமைக்கப்படும். தற்காலிக மையங்களுக்கு வாக்குச்சாவடிகள்தான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படும். வாக்காளர் பட்டியலை வைத்து குறிப்பிட்ட இடங்களில் வாழும் மக்கள்தொகை கணக்கிடப்பட்டு அந்தந்த வாக்குச் சாவடி மையங்கள் கொரோனா தடுப்பூசி மையங்களாக மாற்றப்படும். இதனால் மையங்கள் அமைப்பதும் எளிதாகும்.

வாக்குச்சாவடிகளைத் தவிர, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சமூக அரங்குகளையும் தேர்ந்தெடுத்து தற்காலிக மையங்கள் அமைக்கும் முயற்சியில் சுகாதாரத் துறை ஈடுபட்டு வருகிறது” என்றார். 

மாநில வாரியான தடுப்பூசி மையங்கள் அமைக்கும் வழிகாட்டல்கள் பற்றி 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' தகவல் வெளியிட்டுள்ளது. அதில், ‘’நகராட்சி அலுவலகங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், திருமண மண்டபங்கள், ராணுவ மருத்துவமனைகள், ரயில்வே மருத்துவமனைகள், துணை ராணுவப் படை முகாம்கள், ரயில்வே மற்றும் மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தற்காலிக மையங்களாகப்படலாம்.

இதுபற்றி கொல்கத்தாவைச் சேர்ந்த பொது சுகாதாரத் துறை நிபுணர் டாக்டர் ப்ரந்தர் சக்ரவர்த்தி கூறுகையில், ”வாக்குச்சாவடிகளிலும், மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மையங்களை அமைப்பது சிறந்த யோசனையாக உள்ளது. அதேசமயம் பாஸ்போர்ட் அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று தடுப்பூசி போடுவது சமூக இடைவெளியை கடைபிடிக்க எளிதாக இருக்கும்” என்றார்.

கடைசியாக நடந்த தேர்தலில் இந்தியாவில் 10 லட்சத்துக்கு 3 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் வயதானவர்களின் பட்டியல் தயாரான பிறகுதான், எவ்வளவு வாக்குச்சாவடிகளை மையங்களாக மாற்றலாம் என்பதை தீர்மானிக்க முடியும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் 100-க்கும் குறைவானவர்கள் இருக்கும்பட்சத்தில், அவர்கள் அருகிலுள்ள மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படுவார்கள்.

வழிகாட்டுதலின்படி, மையங்களில் குறைந்தது 3 அறைகளாவது இருக்கவேண்டும். முதல் அறை தடுப்பூசி போடப்படுபவர்களை கண்காணிக்க மற்றும் பிற பணிகளுக்காக பயன்படுத்தப்படும். அடுத்தது தடுப்பூசி அறை. அடுத்தது தடுப்பூசி போடப்பட்டவர்களை கண்காணிக்கும் அறை. அதாவது கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு, ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்பதை குறைந்தது அரை மணிநேரம் வைத்து கண்காணிக்க வேண்டும்.

பொது மற்றும் தனியார் சுகாதார மையங்கள் நிரந்த கொரோனா தடுப்பூசி மையங்களாக செயல்படும். ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் நகர்புற தொடக்கநிலை சுகாதார மையங்களிலும் அரசாங்கத்தின் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். 100-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தனியார் மருத்துவமனைகளும் கொரோனா தடுப்பூசி மையங்களாக பயன்படுத்தப்படும் என்று வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடினமான மற்றும் மாவோயிஸ்டுகள் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் பாதுகாப்பு கருதி, வாக்குச்சாவடிகள்கூட தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட மாட்டாது. எனவே அவர்களுக்கு கேம்ப் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்படும் என்றும் அந்த வழிகாட்டிதலில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com