சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - சென்னை திரைப்பட விழா தொகுப்பு

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - சென்னை திரைப்பட விழா தொகுப்பு
சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - சென்னை திரைப்பட விழா தொகுப்பு

19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா நிறைவையொட்டி சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த 19வது சென்னை சர்வதேசத் திரைப்படத்திருவிழா இன்றுடன் நிறைவடைந்தது. 19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. 'இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்' நடத்தும் இந்தத் திரைப்பட விழாவை பிவிஆர் இணைந்து வழங்குகிறது. 53 உலக நாடுகளிலிருந்து கடந்த சில ஆண்டுகளில் வெளியான 121 படங்கள் திரையிடப்பட்டன. அண்ணா சாலைக்கு அருகில் உள்ள பி.வி.ஆர். மல்டி ஃபிளக்ஸில் (முன்பு சத்யம் சினிமாஸ்) நான்கு திரையரங்குகள் (சத்யம், சீசன்ஸ், செரீன், சிக்ஸ் டிகிரீஸ்), அண்ணா திரையரங்கம் ஆகிய ஐந்து திரைகளில் படங்கள் திரையிடப்பட்டன.

கர்ணன், உடன்பிறப்பே, தேன், கட்டில், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், ஐந்து உணர்வுகள், மாறா, பூமிகா, சேத்துமான், கயமை கடக்க உள்ளிட்ட 11 தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டன. இந்நிலையில் இறுதி நாளான இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த நிகழ்ச்சியில், சிங்கீதம் சீனிவாசராவ், வசந்தபாலன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில், 'சிவரஞ்சனியும், சில பெண்களும்' படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும், 3 லட்சம் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படத்துக்கான விருது இரண்டு படங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அதன்படி, தேன் மற்றும் சேத்துமான் ஆகிய படங்கள் 2வது சிறந்த படத்துக்கான விருதுடன், 2லட்சம் ரூபாய் ரொக்கமும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதேபோல ஸ்பெஷல் ஜூரி விருது நடிகை லட்சுமி ப்ரியாவுக்கு வழங்கப்பட்டது. மேலும், வாழ்நாள் சாதனையாளர் விருது இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்க்கு வழங்கப்பட்டது. அமிதா பச்சன் யூத் ஐகான் அவார்டு பாடகர் சித் ஸ்ரீராமுக்கு வழங்கப்பட்டது. விழாவில் பேசிய இயக்குநர் வசந்தபாலன், ''இயக்குநர் சங்கீதம் ஸ்ரீவாசராவின் படைப்புகளை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத அந்த காலக்கட்டத்திலேயே அபூர்வ சகோதரர்கள் படத்தை இயக்கி மிரட்டியிருக்கிறார். இன்றளவும் கமலை எப்படி உயரம் குறைவானவராக காட்டினார் என எண்ணி வியந்திருக்கிறேன். மைக்கல் மதன காமராஜன் படத்தை இன்றும் ரசித்துப் பார்ப்பேன். ஆளுமை பொருந்தியவர் சிங்கீதம் ஸ்ரீவாசராவ். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுப்பது சாலப்பொருத்தம். அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே தமிழ் சினிமாவில் முக்கியமான படங்கள்'' என்று பாராட்டினார்.

இதையடுத்து பேசிய சங்கீதம் ஸ்ரீவாச ராவ், ''எனக்கு இந்தாண்டு செப்டம்பர் வந்தால் 90 வயதாகிறது. ஆனாலும், என்னிடம் இன்னும் 10 கதைகள் இருக்கின்றன. தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை நான் பெற்றிருந்தாலும், தற்போது வழங்கியிருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்கு ஸ்பெஷல். விருது வழங்கியவர்களுக்கு நன்றி'' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com