மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு அவசர உதவி எண்கள்: தெற்கு ரயில்வே

மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு அவசர உதவி எண்கள்: தெற்கு ரயில்வே

மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு அவசர உதவி எண்கள்: தெற்கு ரயில்வே
Published on

தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல பிரிவில், மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு சிறப்பு அவசர உதவிகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்கெனவே தெற்கு ரயில்வே மகளிர் மற்றும் சாதாரண பயணிகளுக்கென தனித்தனி அவசர உதவி எண்களை வெளியிட்டு, அது பயன்பாட்டிலும் உள்ளது.

இப்போது மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக சிறப்பு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிறுப்பது: மாற்றுத்திறனாளிகள் 044-25354457 என்ற புதிய சிறப்பு அவசர உதவி எண்ணை தொடர்புக்கொள்ளலாம். டெல்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை மண்டலத்தின் வர்த்தக துறை இந்த உதவி எண்ணை ஏற்படுத்தியுள்ளது. இந்த எண் 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் செயல்படும் என்று தெரிவிகப்பட்டுள்ளது. ஏற்கெனவே பயணிகளுக்கு 138,  ரயில்வே பாதுகாப்பு படை 182,  ரயில்வே போலிஸ் 1512 என்ற எண்கள் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com