புதிய பாம்பன் பாலம்
புதிய பாம்பன் பாலம்pt web

புதிய பாம்பன் பாலத்தில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம்.. அதென்ன ’Cantilever’ டெக்னாலஜி?

புதிய பாம்பன் பாலத்தில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம் என்ன? இந்த தொழில்நுட்பம் எப்படி ரயில் போக்குவரத்தை மேலும் எளிமையக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்
Published on

கடல் மீது கட்டப்பட்ட இந்தியாவின் முதல் ரயில்வே பலமான பாம்பன் பாலம் 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அதற்கு மாற்றாக பக்கத்திலேயே கட்டப்பட்டு வரும் புதிய ரயில்வே பாலத்தில் சில அதிநவீன வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன? இந்த தொழில்நுட்பம் எப்படி ரயில் போக்குவரத்தை மேலும் எளிமையக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்

பாம்பன் பாலம்

19 ஆம் நூற்றாண்டில் இலங்கையுடனான வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வழிகளை ஆங்கிலேயர்கள் ஆய்வு செய்தனர். இதன் விளைவாக 1870 ஆம் ஆண்டு இந்திய நிலப்பகுதியுடன் பாம்பன் தீவை இணைக்கும் பாலத்திற்கான திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டன. 1911 ஆம் ஆண்டு பாம்பன் பாலத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 1914 ஆம் ஆண்டு இந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

கடல் மட்டத்திலிருந்து 41 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் 2.2 கிமீ நீளம் கொண்டது. 143 தூண்களை கொண்ட இந்த பாலத்தின் சிறப்பம்சம் பாலத்திற்கு நடுவே கப்பல் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டுள்ள தூக்கு பாலம்தான். இதன்மூலம் ஒவ்வொரு மாதமும் 10 கப்பல்கள் வரை இந்த பாதையை கடந்து செல்கின்றன. இந்த பாலம் கடந்த காலங்களில் பல்வேறு சேதங்களையும் பராமரிப்பு பணிகளையும் கண்டிருக்கிறது.

புதிய பாம்பன் பாலம்
“திட்டத்துல ஏதோ லாபம் இருக்கு.. நாடகம் ஆடுவதில்தான் நீங்கள் கில்லாடிகளே” பரந்தூரில் விஜய்

1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் பாலத்தை பெரிய அளவில் சேதப்படுத்தியது, தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு கப்பல் மோதி பாலத்தின் சில தூண்கள் சேதமடைந்தன. இந்த நிலையில்தான் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாலத்தின் தூண்களில் தொடர்ச்சியாக விரிசல் ஏற்பட தொடங்கியதை அடுத்து 2018-2019 ஆம் ஆண்டுக்கான துணை மானியக் கோரிக்கைகளின் கீழ் புதிய பாலம் கட்டும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

புதிய பாலம்

2020 ஆம் ஆண்டு புதிய பாலம் காட்டும் பணிகள் தொடங்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு நவம்பரில் இதற்கான சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன. முதலில் புதிய பாலத்தின் கட்டுமான பணிகளுக்காக 280 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் பாலம் கட்டி முடிக்கும்போது இதற்கான செலவு ரூ.580 கோடியை எட்டிவிட்டது.

2.1 கிமீ நீளம் கொண்ட இந்த புதிய பாலத்தின் நடுவே 72 மீட்டருக்கு கப்பல்களுக்கு வழிவிட அதிநவீன செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பழைய பாலத்தை விட 3 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் 101 காங்கிரிட் தூண்களைக் கொண்டுள்ளது.

புதிய பாம்பன் பாலம்
சிந்திக்கத் தூண்டும் சிந்தனைகள் 1 | 90 மணி நேர வேலை.. மட்டுமீறிய கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறதா?

லண்டனில் உள்ள டவர் பாலத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானத்திற்கு 5,800 மெட்ரிக் டன் துருப்பிடிக்காத எஃகு மற்றும் 3,40,000 பைகள் சிமென்ட் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,470 மெட்ரிக் டன் எடைகொண்ட புதிய பாலம் கனமான ரயில் போக்குவரத்தையும் வேகமான ரயில்களையும் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பம்

இந்த பாலத்தின் முக்கிய பகுதியான கப்பல் கடந்து செல்லக்கூடிய தூக்குப்பாலம் அதிநவீன கான்டிலீவர் (Cantilever) தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய பாலத்தில் இரண்டாக பிரியும் பகுதியில் கப்பல் செல்ல வழிவிடுவதற்காக ஒவ்வொருமுறை திறக்கும்போதும் ஒட்டுமொத்தமாக 1.5 மணிநேரம் எடுத்துக்கொள்ளும். இதற்காக 2 பக்கமும் சேர்த்து 16 நபர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.

இதற்காக ரயில்கள் மற்றும் கப்பல்கள் நீண்ட நேரம் காத்திருப்பது மட்டுமல்லாமல் பெரும் மனித உழைப்பும் தேவைப்படும். ஆனால் புதிய பாலத்தில் உள்ள கான்டிலீவர் தொழில்நுட்பம் மூலம் தானியங்கி முறையில் செயல்பட்டு வெறும் 5 நிமிடங்கள் 3 வினாடிகளில் பாலம் தூக்கப்படும். ஒட்டுமொத்தமாக பாலத்தை திறந்து மூட 10 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

புதிய பாம்பன் பாலம்
“வளர்ச்சி வேண்டுமென்றால் சிறு சிறு சூழியல் பாதிப்புகளை பெரிதாக்கக்கூடாது” அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பாலம் திறக்கப்படும் ஒட்டுமொத்த நடவடிக்கையும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். அந்த நேரத்தில் எதுவும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க சைரன் அடிக்கும் வழிமுறைகளும் பின்பற்றப்படுகிறது. இந்த தூக்கும் பகுதி மட்டுமே 660 மெட்ரிக் டன் எடை கொண்டதாக உள்ளது.

இப்போதுவரை சராசரியாக 75 கிமீ வேகத்தில் இந்த பாலத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு அதில் மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள் அதிகாரிகள்.. மேலும் எதிர்காலத்தில் இரட்டை தண்டவாளங்கள் அமைக்க மற்றும் மின்சார வழித்தடங்கள் ஏற்படுத்தும் வகையில் இப்போதே தூண்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாலத்தின் கட்டுமான பணி காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பாம்பன் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது புதிய பாலத்தின் கட்டுமானப்பணிகள் சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்று இருந்தாலும் பாலத்தின் தரம் குறித்த சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளதால் இந்த வழித்தடத்தில் மீண்டும் எப்போது ரயில்கள் இயக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

புதிய பாம்பன் பாலம்
மதுரை | "எடிட் செய்த பிரபாகரன் படத்தை வைத்து பல கோடிகள் மோசடி" - சீமான் மீது நடவடிக்கை கோரி புகார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com