"60 ஆண்டுகள் ஆகியும் எந்த அரசு சலுகையும் கிடைக்கல” - மத்திய பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் வேதனை!

மத்தியபிரதேசத்தில் அரசு சலுகைகளிலிருந்து வஞ்சிக்கப்படுவதாக அங்கு வாழும் தமிழக குடும்பங்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழக மக்கள்
தமிழக மக்கள்PT

மத்திய பிரதேசத்தில் 60 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்தாலும் அரசு சலுகை எதுவும் கிடைக்காமல் தமிழக குடும்பங்கள் அவதியடைந்து வருகின்றன. மத்தியபிரதேசத்தில் உள்ள எளிய தமிழக மக்களின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த பிரத்யேக தொகுப்பு....

கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி என பல மாவட்டங்களில் இருந்து 1950களில் தமிழர்கள் பலர் தொழில் நிறுவனங்களில் வேலைக்காக மத்தியப்பிரதேசம் சென்றுள்ளனர்.

அப்படி சென்றவர்களில் சிலர் போபல் உள்ள அண்ணா நகரில் 750க்கும் மேற்பட்ட தமிழக குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடியேறி 50 ஆண்டுகள் ஆனாலும் அவர்களுக்கு என்று எந்த ஒரு அங்கீகாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதே அந்த மக்களின் வேதனையாக இருக்கிறது.

குறிப்பாக பட்டா, சாதி சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்டவை கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.

சாதி சான்றிதழ் இல்லை என்பதால் குழந்தைகள் பள்ளியில் படிக்க அரசு உதவி கிடைப்பதில்லை என கூறும் மக்கள் கல்லூரிக்கு சென்றால் பொதுபட்டியல் மூலமாகவே கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மத்திய பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் கூறுகையில், ”மத்திய பிரதேச அரசிடம் எந்த சான்றிதழும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் முயற்சிக்கலாம் என பார்த்தால் அங்கும் 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஆவணங்களை இப்போது கேட்டால் எப்படி என சொல்கின்றனர். இரண்டு மாநிலங்களிலும் புறக்கணிக்கப்பட்ட மக்களாக நங்கள் இருக்கிறோம்” என கண்ணீர் சிந்துகின்றனர்.

மேலும், “மத்திய பிரதேசத்தில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 1 லட்சம் பேர் வசித்து வந்தாலும் ஒரு பள்ளியில் கூட தமிழ் இல்லை என்பதால் எங்கள் பிள்ளைகளை தமிழில் படிக்க வைக்க வேண்டும் என நினைத்தாலும் அதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இங்கு இல்லை” என மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com