செப்டம்பர் 1 முதல் எந்தெந்த மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது? - முழுவிபரம்

செப்டம்பர் 1 முதல் எந்தெந்த மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது? - முழுவிபரம்
செப்டம்பர் 1 முதல் எந்தெந்த மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது? - முழுவிபரம்

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதலே பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது படிப்படியாக இயல்புநிலை திரும்பிய பிறகு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பள்ளிகள் திறக்கும் மாநிலங்களின் பட்டியல் இங்கே:

டெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியில் பள்ளிகள் இரண்டு கட்டங்களாக மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும்  புதன்கிழமை முதல் 9 - 12 வகுப்புகள் மீண்டும் திறக்கப்படும், 6 - 8 வகுப்புகள் செப்டம்பர் 8 முதல் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, அதிகபட்சம் 50 சதவீத வருகை அனுமதிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு: 9 - 12 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கும் என்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. முதல்கட்டமாக, அதிகபட்சமாக 50 சதவீத மாணவர்கள் எண்ணிக்கையுடன்குப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக மீண்டும் செப்டம்பர் 1 முதல் திறக்கப்படும். அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் கூடுவதைத் தவிர்க்க, வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் வருகை மற்றும் புறப்படும் நேரத்தை தனித்தனியாக வைத்திருக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம்: 6 - 8 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 9 - 12 வகுப்புகள் இப்போது தினமும் செயல்பட்டு வருகிறது. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் ஜூலை 26 அன்று மீண்டும் தொடங்கின, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆகஸ்ட் 5 அன்று மீண்டும் பள்ளிக்குத் திரும்பினர்.

மேகாலயா: மேகாலயாவில் அனைத்து கல்லூரிகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளில் 9 - 12 வகுப்புகளும் மீண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கும். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் 6 12 வகுப்புகள்  மீண்டும் புதன்கிழமை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

குஜராத்: செப்டம்பர் 2 முதல் 6 - 8 வரையிலான வகுப்புகள் மீண்டும் தொடங்கும் என ஆகஸ்ட் 25 அன்று மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே குஜராத்தில்  9 – 12 வகுப்பு மாணவர்கள் ஜூலை 26 முதல் பள்ளிக்குச் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com