திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு

திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு

பொங்கல் திருநாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டிகளின் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பை இங்கு காணலாம். (கீழே)

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள், பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களிலும், திருச்சி பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி , கூலமேடு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனி மாவட்டம் தேனீமலை போன்ற இடங்களில் ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறும்.

இந்நிலையில். தை முதல்நாளான இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக வருகிறேன் முடிந்தால் திமிலை தொட்டுபார் என காளையும், உன்னை அடக்காமல் விடமாட்டேன் என காளையரும் ஒருவருக்கு ஒருவர் இளைத்தவர் இல்லை என போட்டுபோட்டு களம்கண்டு வருகின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்பித்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக் களத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு...

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com