என்ன செய்தார் வாஜ்பாய் ?

என்ன செய்தார் வாஜ்பாய் ?
என்ன செய்தார் வாஜ்பாய் ?
Published on

அடல் பிஹாரி வாஜ்பாய், இந்தப் பெயர்தான் நவீன இந்தியாவில் நாம் அனுபவிக்கும் பல வளர்ச்சிகளுக்கு வித்திட்டு காரணமாக இருந்தவர். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் பல முக்கியமான திட்டங்களையும் முடிவையும் எடுத்தார். மிக முக்கியமாக இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசை 5 ஆண்டுகள் முழுமையாக வழிநடத்திய பெருமைக்குரியவர் வாஜ்பாய். இந்தியப் பிரதமர்களில் வாஜ்பாயின் சாதனைகள் சிலது, வரலாற்றுச் சுவடுகளில் எழுதப்பட வேண்டியதாக பார்க்கப்படுகிறது.

1. இந்தியா இப்போது அணு ஆயுதங்கள் கொண்ட நாடு. நம்மிடம் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதற்கான தகுதி இருக்கிறது. நாம் அதை ஒரு போதும் ஆத்திரத்திற்காக பயன்படுத்த மாட்டோம் என்று கூறியவர் வாஜ்பாய். போக்ரான் அணு குண்டு சோதனைக்கு பின்பு வாஜ்பாய் சொன்ன வார்த்தைகள் இவை. போக்ரான் அணு குண்டு சோதனைக்கு பின்பு, மேற்கத்திய நாடுகள் வாஜ்பாய்க்கு கண்டனங்கள் தெரிவித்தனர். இந்தியா மீது பொருளாதார தடைகளையும் விதித்தது. ஆனால் அதையும் மீறி இந்தியாவை 1999 இல் அணு ஆயுதங்கள் கொண்ட நாடாக உருவாக்கியவர் வாஜ்பாய்.

2. ராஜீவ் காந்தி இறந்த பிறகு இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியானது 0.6 % இல் இருந்து 2.8% த்திற்கு உயர்ந்தது. இதற்கு பத்தாண்டுகள் எடுத்துக் கொண்டது இந்தியா. ஆனால், வாஜ்பாய் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய தொலை தொடர்பு கொள்கை (NTP - New Telecom Policy) இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியை 3% இல் (1999) இருந்து 70% த்திற்கு (2012) உயர்த்தியது. இந்தச் சாதனையை ஒரு தொலைத் தொடர்பு துறையில் ஒரு புரட்சி என மாற்றுக் கட்சியினரும் பாராட்டினர்.

3. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில்தான் "ரைட் டூ எடுகேஷன் இன் இந்தியா" என்ற திட்டத்தை சர்வ சிக்ஷா அபியான் என்ற பெயரில் கொண்டு வந்தார். இது அனைவருக்கும் கல்வி என்ற பெயரில் இந்தியா முழுக்க மிகவும் பிரபலமானது. இதனால் பலர் கல்வி வாய்ப்பு பெற்றனர். கல்விதுறையில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாக இன்று வரை பார்க்கப்படுகிறது.

4.வாஜ்பாய் ஆட்சியின் கீழ் தான் கார்கில் போர் மோதலை எதிர்கொண்டது இந்தியா. அதே போல 1999, 2000 ஆம் ஆண்டுகளில் இரண்டு பெரும் சூறாவளி காற்று தாக்குதல், 2001ல் பெரும் பூகம்பம்... 2002-2003ல் வறட்சி மற்றும் எண்ணெய் நெருக்கடி, இரண்டாம் கல்ஃப் போர் என பல தாக்கங்கள்.. ஆனால், ஒருபோதிலும் இவை அனைத்தும் இந்தியாவின் ஜி.டி.பி'யில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் வாஜ்பாய்.

5. 2000 ஆம் ஆண்டு பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். ஜிம்மி கார்டர்க்கு பிறகு இந்தியாவுக்கு வருகை தந்த முதல் அமெரிக்க அதிபர் கிளிண்டன். இந்த சந்திப்பின் போது இந்தியா - அமெரிக்கா மத்தியிலான உறவு வலுவடைந்தது. 

6. டெல்லி - லாகூர் இடையே முதல் மக்கள் போக்குவரத்து துவக்கி முதல் ஆளாக பயணித்தார் வாஜ்பாய். 

7. பிராந்திய மோதல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து சீனாவுடன் வணிக கூட்டு அமைத்தார். 

8. டெல்லியில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முதலில் ஒப்புதல் வழங்கியவர் வாஜ்பாய். 

9. நிலாவுக்கு 2008 இல் இந்தியா விண்கலம் அனுப்பவிருக்கிறது என்று பெருமையுடன் கூறியவர் வாஜ்பாய். அதன் பின்புதான் இஸ்ரோ சந்திராயன் திட்டத்தை உருவாக்கியது. 

10. 1998 இல் இந்தியாவில் நேஷனல் ஹைவே டெவலப்மென்ட் பிராஜக்ட் (தங்கநாற்கர) என்ற பெயரில் உலகத்தரமான தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியவர் வாஜ்பாய். இந்த திட்டத்தின் கீழ் 49,260 கிலோமீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டன.

11. பழங்குடி, சமூக நலன், சமூக நீதி போன்றவைக்கு அமைச்சகம் மற்றும் வடகிழக்கு பகுதிக்கு தனி துறை என்று பல புதிய விஷயங்களை புகுத்தியவர் வாஜ்பாய். 

12. 2014 டிசம்பரில் வாஜ்பாய்க்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com