மின்சார வாரியத்தில் உதவி என்ஜினீயர் ஆக வேண்டுமா ? சொல்லி அடி பாகம் - 11

மின்சார வாரியத்தில் உதவி என்ஜினீயர் ஆக வேண்டுமா ? சொல்லி அடி பாகம் - 11
மின்சார வாரியத்தில் உதவி என்ஜினீயர் ஆக வேண்டுமா ? சொல்லி அடி பாகம் - 11

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி என்ஜினீயர் பணிக்கான தேர்வு இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கிறது. அதற்கான பயிற்சியை எப்படி மேற்கொண்டு வெற்றி பெறுவது என்பதை பார்ப்போம். 

அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடக்க இருக்கும் எழுத்துத் தேர்வில் கணிதப் பாடத்தில் 20 மதிப்பெண்களும், Engineering Basics பிரிவில் 20 மதிப்பெண்களும், Technical பாடத்தில் 60 மதிப்பெண்களும் இருக்கிறது. இதில் அதிக மதிப்பெண் எடுக்க உதவும் பிரிவுகள் என்றால் கணிதம் மற்றும் engineering basics. கணிதத்தில் மட்டுமே வெறும் பார்முலாவை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க முடியும். அடுத்ததாக என்ஜினீயரிங் பேசிக்ஸ் கேள்விகளில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், மெட்டீரியல் சயின்ஸ், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் இருக்கும். இந்த பிரிவில் 35 கேள்விகள் கேட்கப்படும், ஆனால் 20 கேள்விகளுக்கு மட்டும் விடை அளித்தால் போதுமானது.

என்ஜினீயரிங் பேசிக்ஸ் பிரிவில் தளர்வு இருப்பதனால் நிச்சயமாக குறைந்த பட்சமாக 15 மதிப்பெண்கள் எடுக்கமுடியும்.
 டெக்னிக்கல் பிரிவில் 60 கேள்விகள் இருக்கும். மேலே குறிப்பிட்டுள்ள 2 பிரிவுகளிலும் தலா 15 மதிப்பெண்கள் என்று வைத்துக்கொண்டால் மொத்தம் 30 மதிப்பெண்கள் கிடைக்கும். அடுத்ததாக டெக்னிக்கல் பிரிவில் ஒரளவு படித்தால் கூட 20 மதிப்பெண்கள் எடுக்க முடியும். எனவே 50 மதிப்பெண்களை எளிதாக எடுக்கும் வாய்ப்பினை நீங்கள் ஏற்படுத்திக்கொண்டு தயாராக வேண்டும்.  பழைய கேள்வித்தாள்களை வைத்து தயார் செய்தால் மேலும் வசதியாக இருக்கும்.

பழைய கேள்வித்தாள்களுக்கு: https://www.tangedco.gov.in/linkpdf/AE%20questuonanswer(9318).pdf

மேலும் சொல்லி அடி தொடர்ந்து படிக்க

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com