பேரவையின் 30 நிமிட ஒத்திவைப்பு, கைகோத்த பாஜக - காங்... அசாமின் 'லவ்லினா' நெகிழ்ச்சிகள்!

பேரவையின் 30 நிமிட ஒத்திவைப்பு, கைகோத்த பாஜக - காங்... அசாமின் 'லவ்லினா' நெகிழ்ச்சிகள்!

பேரவையின் 30 நிமிட ஒத்திவைப்பு, கைகோத்த பாஜக - காங்... அசாமின் 'லவ்லினா' நெகிழ்ச்சிகள்!

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவின் போட்டியைக் காண்பதற்காக அசாம் சட்டப்பேரவை 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வு நடந்தேறியுள்ளது.

69 கிலோ எடைப்பிரிவான மகளிர் வெல்ட்டர் வெயிட் குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டியில் துருக்கி வீராங்கனை சுர்மெனெலி புசெனாஸிடம் தோல்வியுற்றார், இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன். இதனால், அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 3-வது பதக்கம் இதுவாகும்.

ஏற்கெனவே மீராபாய் சானு, பி.வி.சிந்து ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளர். தோல்வியுற்றாலும் மேரி கோம் மற்றும் விஜேந்தர் சிங் ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் லவ்லினா. லவ்லினாவின் இந்த சாதனை காரணமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இதற்கிடையே, லவ்லினாவின் அரையிறுதி போட்டிக்காக அசாம் சட்டப்பேரவை இன்று (புதன்கிழமை) 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது. அசாம் சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதனிடையேதான் லவ்லினாவின் போட்டியை காண்பதற்காக முப்பது நிமிடங்கள் ஒருமனதாக அவை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. போட்டியை காண்பதற்காக சட்டமன்ற வளாகத்திற்குள் நேற்றே சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன.

இறுதியாக லவ்லினா வெண்கலப்பதக்கம் வெல்ல, மொத்த அசாம் மாநிலமும் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறது. இந்த மகிழ்ச்சியின் பின்னணி, அசாம் சார்பில் ஒலிம்பிக்கிற்கு சென்று பதக்கம் வென்ற முதல் பெண் லவ்லினா மட்டுமே என்பதுதான். முன்னதாக ஹீமா தாஸ் ஒலிம்பிக்கிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் காயம் அடைந்ததால் ஒலிம்பிக்கிற்கு செல்ல முடியாத நிலை உண்டானது. மேலும், இதுவரை ஒலிம்பிக்கில் அசாம் சார்பில் யாரும் பதக்கமும் வென்றதில்லை. இந்த ஏக்கத்தை தற்போது லவ்லினா தீர்த்து வைத்துள்ளார்.

இதுபோன்ற காரணங்களால் லவ்லினா ஒலிம்பிக் சென்றபோதே அவரை கொண்டாட ஆரம்பித்தனர் அசாம் மக்கள். தெருக்களில் லவ்லினாவின் ஓவியத்தை மக்கள் வரைந்தால், அசாம் அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் பாஜக, காங்கிரஸ் லவ்லினாவை ஊக்கப்படுத்துவதற்காக கைகோத்தன.

சில தினங்கள் முன்பு, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒன்றாக இணைந்து லவ்லினாவுக்காக `Go for Glory lovlina' என்ற பெயரில் சைக்கிள் பேரணி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தற்போது பதக்கங்கள் வென்றுள்ள லவ்லினாவுக்கு அம்மாநில முதல்வர், ஹிமந்த பிஸ்வா சர்மா, ``உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது லவ்லினா. அசாம் முதல் முறையாக ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நாள் . இந்த சாதனையை நிகழ்த்திய உங்களை நாங்கள் வாழ்த்துகிறோம், கொண்டாடுகிறோம். வணங்குகிறோம். 

அசாமின் வரலாற்றில் உங்கள் பெயர் பொன்னெழுத்துக்களாகப் பொறிக்கப்படும். உங்கள் அற்புதமான சாதனையால் ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது" என்று நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com