வேஷ்டிசட்டை..முறுக்கு மீசை..தெறிக்கும் ஸ்டண்ட் - எதிர்பார்ப்பை எகிற வைத்த ’அண்ணாத்த’ டீசர்

வேஷ்டிசட்டை..முறுக்கு மீசை..தெறிக்கும் ஸ்டண்ட் - எதிர்பார்ப்பை எகிற வைத்த ’அண்ணாத்த’ டீசர்
வேஷ்டிசட்டை..முறுக்கு மீசை..தெறிக்கும் ஸ்டண்ட் - எதிர்பார்ப்பை எகிற வைத்த ’அண்ணாத்த’ டீசர்

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் குறித்து பார்ப்போம்.

'அண்ணாத்த' திரைப்படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது. இது அண்ணாத்த தீபாவளி என்று சொல்லும் அளவிற்கு வெடிக்கும் சண்டைக்காட்சிகளால் டீசர் நிறைந்திருக்கிறது. ப்ரேம் பை ப்ரேம் ரஜினி மட்டுமே கண்ணில் படுகிறார். கிராமத்து ரஜினியை திரையில் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இயக்குநர் சிவா, 'நான் அதுலதாங்க ஸ்பெஷலிஸ்ட்' என கடா மீசையுடன், கையில் அருவாளை கொடுத்து வேஷ்டி சட்டையுடன் ரஜினியை காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக ரஜினி கையில் அருவாளுடன் பைக்கில் வரும் காட்சிகளை திரையரங்கில் நினைத்து பார்க்கும்போதே சிலிர்க்கிறது.

வசனங்களும் கிராமத்து சாயலை ஒத்தியே இருக்கின்றன. அப்படிப்பார்க்கும்போது அண்ணாத்த முழுக்க முழுக்க கிராமத்து கைதைய மையமாக வைத்து உருவாகும் படம் என்றே தெரிகிறது. ரஜினியை பொறுத்தவரை,'வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவேயில்ல' என்ற படையப்பா பட நீலாம்பரி வசனம் இன்றும் ஒத்துப்போகிறது. 'வா..சாமி!' என ஒலிக்கும் பின்னணி இசை மாஸை க்ளாஸாக்குகிறது.

தெறிக்க விடும் சண்டைகாட்சிகளுக்கு இமானின் இசை உத்வேகமளிக்கிறது. டீசரை பார்த்து முடிந்ததும், 'விஸ்வாசம்' படத்தின் சாயல் இருப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் ரஜினி ரசிகர்களுக்கு இது முற்றிலும் புதுவித அனுபவமாக இருக்கும் என தெரிகிறது. இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதால் படம் இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

குறிப்பாக டீசரின் இறுதியில் 'வா..சாமி' என பிஎம் ஒலிக்க லாரிகள் ஒவ்வொன்றாக வெடிக்க, மீசையை முறுக்கியபடியே, தீ பேக்ரவுண்டின் நிறம் டிஸ்ப்ளேவை ஆக்கிரமிக்க ரஜினி நடந்து வரும் காட்சிகளைக்கண்ட பலரும், 'வா தலைவா' என உற்சாகத்தில் குதூகலித்துள்ளனர்.

கொரோனா காலத்தில் மாஸான திரைப்படங்களை பார்த்தே வருடக்கணக்கில் ஆகியுள்ள நிலையில், தற்போது தீபாவளி அன்று திரையரங்கே மீண்டும் களைக்கட்ட தொடங்கியிருப்பது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. தமிழகத்தில் முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாக பண்டிகைகள் பண்டிகைகளாக இருப்பதில்லை. அப்படி பார்க்கும்போது இந்த தீபாவளி ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்குமான சிறப்பான தீபாவளியாக இருக்கும் என்பது உறுதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com