தொடங்கிவிட்டது மழைக்காலம்.. உங்க ’பைக்’க பத்திரமா பாத்துக்க சில டிப்ஸ்...!

தொடங்கிவிட்டது மழைக்காலம்.. உங்க ’பைக்’க பத்திரமா பாத்துக்க சில டிப்ஸ்...!
தொடங்கிவிட்டது மழைக்காலம்.. உங்க ’பைக்’க பத்திரமா பாத்துக்க சில டிப்ஸ்...!

மழைக்காலம் தொடங்கிவிட்டது. அதனை எதிர்கொள்ள சிலவற்றை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். உடல்நிலையில் மட்டுமின்றி
நாம் பயன்படுத்தும் வாகனங்கள் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனங்களை அதிக கவனமுடன் கையாள
வேண்டும். மழைக்காலத்தில் இரு சக்கர வாகனத்தை பராமரிப்பது எப்படி என்பதை காண்போம்.

பைக் கவர்:
நம் வீட்டிலேயோ அல்லது அலுவலகத்திலேயோ இரு சக்கர வாகனம், மழை படாதவாறு சரியான இடத்தில் பாதுகாப்பாக
நிறுத்தப்பட்டிருந்தால் எந்த பிரச்னையும் இல்லை. ஒருவேளை பைக் மழையில் நனையும்படியான இடத்தில் நிறுத்தும்படி இருந்தால் பைக்
கவர் மிக முக்கியம். கவரானது பைக்கை மழையில் இருந்து பாதுகாக்கும்.மழைநீரில் பைக்கானது தொடர்ந்து நனைந்தால் பெயிண்ட்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரு பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் பைக் ஸ்விட்ச்களில் மழைநீர் புகுந்து பாதிப்புகள் ஏற்படலாம்.

பிரேக்:

பிரேக்கில் மழைக்காலத்தில் கூடுதல் கவனம் தேவை. கோடையில் சாலைகள் வறண்டு கிடப்பதால் சராசரியாக பிரேக் பிடித்தாலே உங்கள் பைக் நின்றுவிடும். அதுவே மழைக்காலம் என்றால் வழுவழுப்பான சாலையாக இருக்கும். அந்த நேரத்தில் வழக்கமான உங்கள் பிரேக் சொதப்பக்கூடும். அதனால் அதற்கு ஏற்ப உங்கள் பைக்கின் பிரேக்கை சரிசெய்து கொள்ளவேண்டும்.

டயர்:

பிரேக்கை போலவே டயரும் மிக மிக முக்கியமான ஒன்று. மழைக்காலத்தில் வழுவழுப்பான சாலையுடன் நேரடி தொடர்பில் இருப்பது பைக்கின் டயர்கள் தான். பிரேக் சரியாக இருந்தாலும் டயரில் சரியான சொரசொரப்பு பட்டைகள் இருந்தால்தான் பிரேக் பிடித்த இடத்திலேயே வண்டி நிற்கும். பொதுவாக பைக் டயர்கள் எளிதில் ஸ்கிட் செய்துவிடும். அது சாலை மற்றும் டயர்களில் சொரசொரப்பை பொருத்தது. வழுவழுப்பான டயர்கள் மழைக்காலத்தில் வாகனத்தை ஸ்கிட் செய்யுமே தவிர நிறுத்தாது. எனவே பட்டைகள் தேய்ந்த டயர்கள் என்றுமே ஆபத்துதான். அதுவும் மழைக்காலத்தில் அதிக ஆபத்து. எனவே உங்கள் டயர் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் டயரில் உள்ள காற்ற்றின் அளவையும் அடிக்கடி சோதனை செய்துகொள்ள வேண்டும். சாலையின் தன்மைக்கு ஏற்ப காற்றின் அளவை பராமரிக்க வேண்டும்.

செயின்:

பைக்கில் செயின் மிக முக்கியமானது, மழைக்காலங்களில் செயின் மீது அதிக கவனம் தேவை. சரியாக சுத்தம் செய்யப்பட்டு
ஆயில் போடப்பட வேண்டும். மழைக்காலங்களில் எளிதில் சேறுபடும் என்பதால் அடிக்கடி செயினை சுத்தம் செய்து ஆயில் போடலாம். அப்படி செய்தால் ஸ்மூத் மற்றும் பாதுகாப்பான பயணத்தை கொடுத்தும்.


ஏர் ஃபில்டர்:

செயினை அடிக்கடி சுத்தம் செய்துவது போல ஏர் ஃபில்டரையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மழையின் ஈரப்பதம் காரணமாக ஏர் ஃபில்டரில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஆக்சிலேட்டர், பிரேக் உள்ளிட்டவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே ஏர் ஃபில்டர் பராமரிப்பு மிக முக்கியமானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com