பூபேந்திர படேல் அமைச்சரவையில் புதுமுகப் பட்டாளம்! - குஜராத்தில் பாஜக 'பக்கா' வியூகம்!

பூபேந்திர படேல் அமைச்சரவையில் புதுமுகப் பட்டாளம்! - குஜராத்தில் பாஜக 'பக்கா' வியூகம்!
பூபேந்திர படேல் அமைச்சரவையில் புதுமுகப் பட்டாளம்! - குஜராத்தில் பாஜக 'பக்கா' வியூகம்!

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்ற பூபேந்திர படேலின் அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய முதல்வர் விஜய் ரூபானியின் அமைச்சரவையில் பங்கேற்ற அமைச்சர்களில் ஒருவருக்குக் கூட படேல் அமைச்சரவையில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வாய்ப்பு அளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அடுத்த வருட சட்டப்பேரவைத் தேர்தலில் முழுக்க முழுக்க புதிய முகத்துடன் களமிறங்க பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்தது, இந்தப் புதுமுக அமைச்சரவைக்கு பின்னணி என கட்சியின் பல தலைவர்கள் பேசிவருகின்றனர். முதல்வரே அரசுக்கு புதுமுகம் என்பதுடன் நிற்காமல் புதுமுகங்களை அமைச்சர்களாகவும் தேர்ந்தெடுத்துள்ளது பாஜக. வியாழக்கிழமை பதவியேற்ற புதிய குஜராத் அமைச்சரவையில் மூன்று அமைச்சர்கள் முந்தைய அரசுகளில் பணியாற்றி உள்ளார்கள். ஆனால் விஜய் ரூபானி அமைச்சரவையில் பணியாற்றிய 23 அமைச்சர்களில் ஒருவருக்குக் கூட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

முந்தைய அரசு மீது பொதுமக்களுக்கு உள்ள அதிருப்தி முழுமையாக நீங்க வேண்டும் என்பதற்காக அனைத்து அமைச்சர்களையும் பாரதிய ஜனதா கட்சி மாற்ற முடிவு எடுத்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அடுத்த வருட சட்டப்பேரவைத் தேர்தலில் புதுமுகங்களுடன் களமிறங்குவது வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என பாஜக தலைமை இத்தகைய முடிவை எடுத்துள்ளது என கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர்.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் அரசியலை நன்றாக புரிந்தவர்கள் என்பதால் அவர்கள் இத்தகைய
முடிவெடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. இதனால், முந்தைய அரசில் அமைச்சர்களாக உள்ள பலர் அதிருப்தி அடைந்து இருந்தாலும், புதுமுகங்களையே களம் இறக்குவது என்கிற முடிவில் பாஜக உறுதியாக செயல்பட்டுள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்த ராஜேந்திர திரிவேதி வியாழக்கிழமை காலை ராஜினாமா செய்து, பின்னர் அமைச்சராக பதவியேற்றார். அதன் காரணமாக பதவியேற்பு விழா தாமதமாக நடைபெற்றதாக பாஜக தலைவர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

முன்னாள் துணை முதல்வரான நிதின் படேல் மற்றும் கல்வி அமைச்சரான பூபேந்திரசின் சவுதசமா ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டது பாரதிய ஜனதா கட்சியினருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதேபோல், முன்னாள் அமைச்சர்களான பிரதீப்சின் ஜடேஜா மற்றும் சவுரப் பட்டேல் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் பொய்யாகியுள்ளது.

அடுத்த வருட சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு படேல் சமுதாயத்தை சேர்ந்த பூபேந்திர படேல் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், இதனால் 50-க்கும் அதிகமான தொகுதிகளில் பாரதிய ஜனதாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் எனவும் கருதப்படுகிறது.குஜராத் மாநிலத்தில் 24 வருடங்களாக பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், விஜய் ருபானி அரசு மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருந்ததால், அதை சரிகட்ட முழு அமைச்சரவையும் பாஜக மாற்றியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com