ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை திருடப்பட்டதா? இப்பொழுது எங்கு இருக்கிறது? அதிர வைக்கும் பின்னணி!

இப்படி ஒரு மூளையா.? என்று விஞ்ஞானிகள் கூட வியந்தனர். இப்படிபட்ட இவரின் மூளை திருடு போனது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்.. இவரின் மூளை எப்படி திருடுபோனது யார் அதை எடுத்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
Albert Einstein, Brain
Albert Einstein, BrainPT Desk

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இயற்பியல் அறிஞர் என்பது எல்லோருக்கும் தெரியும். இயற்பியல் துறை மீதான இவரது ஆளுமையானது இன்று வரை இயற்பியளாளருக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. இயற்பியலுக்காக 1921ம் ஆண்டு நோபல் பரிசை பெற்றவர். Quantum Mechanics, Cosmology, theory of relativity , photoelectric effect இப்படி பல துறைகளில் சிறந்து விளங்கிய இவரின் அறிவை பார்த்து உலகமே வியந்தது.

இப்படி ஒரு மூளையா.? என்று விஞ்ஞானிகள் கூட வியந்தனர். இப்படிபட்ட இவரின் மூளை திருடு போனது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்.. இவரின் மூளை எப்படி திருடுபோனது யார் அதை எடுத்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

’வயலின் வேண்டாம்’.. கேள்விகளால் மற்றவர்களை துளைத்தெடுத்த ஐன்ஸ்டீன்!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் உல்ம் என்னும் இடத்தில் 1879ல் பிறந்தவர். இவரது அம்மாவும் எல்லா அம்மாவைப்போலதான். தன் மகன் பெரிய வயலினிஸ்டாக வரவேண்டும் என்று விரும்பி இவரை வலுகட்டாயமாக வயலின் கற்க வைத்திருக்கிறார். ஆனால் இவருக்கு வயலின் மீதோ, படிப்பின் மீதோ அதிக விருப்பம் இல்லாமல் பொழுதை கழித்துள்ளார். ஆனால், இவர் நிறைய கேள்விகள் கேட்பாராம். இவரை பார்த்தாலே, இவரின் கேள்விகளுக்கு பதில் சொல்லதெரியாமல், நண்பர்களும், ஆசிரியர்களும் ஓடி ஒளிந்துக் கொள்வார்களாம். ஒரு முறை இவரது தந்தை இவருக்கு திசைகாட்டும் கருவி ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.

இவரது கேள்விகள் அடங்கிய மூளையானது, அத்திசை கருவியின் ஊசிகள் வட திசையை நோக்கி இருப்பதை உணர்ந்து, இந்த ஊசி மட்டும் ஏன் ஒரே திசையை காட்டுகிறது? என்று தனக்குள்ளே கேள்வி கேட்க தொடங்கியவருக்கு, அவரது மூளையானது பதில் அளித்தது. அதன் விளைவாக காந்தபுலத்தை அறிந்துக் கொள்ள ஆசைப்பட்டார். அதனால் அதே போல் காந்தப்புலத்தை கொண்ட இயந்திரக்கருவிகளை சிறுவயதிலேயே செய்து வந்துள்ளார்.

பள்ளிபடிப்பை முடித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது மேல் படிப்பை சுவிட்சர்லாந்தில் படித்தார். படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காததால், ஒரு காப்புரிகை அலுவலகத்தில் பணிபுரிந்தார். ஓய்வு நேரத்தில் அவருடைய பல கேள்விகளுக்கான விடையை அவர் அங்கு தேடத்தொடங்கினார். அவரின் தேடுதலுக்கான விடை அங்கிருந்தது ஆரம்பித்தது.

கண்டுபிடிப்புகளால் மலைக்க வைத்த ஐன்ஸ்டீன்!

தனது முதல் கண்டுபிடிப்பான பிரௌனியன் இயக்கம் அராய்ச்சியின் கட்டுரையை வெளியிட்டார். அதன் பிறகு, ஒளியின் உற்பத்தி தொடர்பான கட்டுரை, சிறப்புச் சார்புக் கோட்பாடு, நிறை ஆற்றல் சமன்மை விதி என்று பல அறிவியல் ஆராய்சிகளை அடங்கிய விதியினை அடுத்தடுத்து வெளியிட்டார். இது பல அறிஞர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 1905 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெளியிட்ட இந்த நான்கு ஆய்வு கட்டுரைகள் இயற்பியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1921ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசினை பெற்றார்.

இவ்வாறு இவரின் பலபல புதிய கண்டுபிடிப்புகள், e=mc2, the theory of special relativity photoelectric போன்ற இயற்பியல் விதிகள் பல விஞ்ஞானிகளின் புருவத்தையும் உயர வைத்தது. மக்கள் இவருக்கு யாருக்குமே இல்லாத அரிய மூளை இருப்பதாக எண்ணினர். இதை எண்ணுவதுடன் நிறுத்தாமல் செயலிலும் இறங்கினர். இது ஐன்ஸ்டீனுக்கும் தெரிந்தது. அதனால், அவர் ஒரு கோரிக்கை ஒன்றை வைத்தார். அது, அவர் இறந்ததும் அவரின் உடலை எரியவிடவேண்டும் என்றும் அவரின் உடலை ஆய்வு செய்யவேண்டாம் எனவும் கூறி இருந்தார். ஆனால் அவர் கேட்டுக்கொண்டது போல் எதுவும் நடக்கவில்லை.

தூக்கத்திலேயே மறைந்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!

1955 ஏப்ரல் 18 அவர் இறந்தார். அன்று நடந்த அவரின் பிரேத பரிசோதனையின் போது அவரது மூளை தாமஸ் ஹார்வே (Dr. Thomas harvey) Pathologist என்ற மருத்துவர் திருடினார். அந்த மூளையை 240 துண்டுகளாக வெட்டி பிரித்தார். அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்களுக்கு அந்த மூளையின் வெட்டப்பட்ட பகுதிகளை அனுப்பி வைத்தார். இவையெல்லாம் ஐன்ஸ்டீன் குடும்பத்தாரின் அனுமதி இல்லாமலேயே நடந்தேறியது. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் இந்த விஷயங்கள் வெளி உலகிற்கு தெரியவே இல்லை.

Albert Einstein
Albert Einstein

இந்த விவரம் தெரியவரவும் அவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்பவே ( hans albert) அவரது மகனின் ஒப்புதலோடு ஆராய்சியில் ஈடுபட ஆரம்பித்தார். ஆனால், நினைத்தது போல அவரால் ஆராய்ச்சியை தீவிரமாக மேற்கொள்ளமுடியவில்லை. ஆய்வுக்காக பல துண்டுகளாக்கப்பட்ட ஐன்ஸ்டீன் மூளையை மருத்துவ நண்பர்கள் சிலரின் உதவியால் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.

ஐன்ஸ்டீனின் மூளை பற்றிய ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

ஐன்ஸ்டீனின் மூளை பற்றிய முதல் ஆராய்சி முடிவானது 1985ல் வெளியிடப்பட்டது. அதில், “ஐன்ஸ்டீன் மூளையானது சாதாரண மனித மூளையை விட முற்றிலும் வேறுபட்டுள்ளது. இரு மூளையை இணைக்கும் corpus callosum என்ற அடி பகுதியில் மிகப்பெரிய வேறுபாட்டை மருத்துவர்கள் உணர்ந்தார்கள். மேலும் இந்த வேறுபாடானது அவரின் தொடர் பயிற்சியால் உருவானதாகவும், பிறப்பில் இல்லை ”எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, 1998 ஆம் ஆண்டுதான், இந்த மூளையின் பகுதிகளானது பிரிஸ்டன் மருத்துவ பல்கலைக் கழகத்திற்கு (University Medical Center of Princeton) கொண்டு வரப்பட்டது.

இன்றும் அவரின் வெட்டப் பட்ட மூளையானது அமெரிக்காவின் மட்டர் மியூசியத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அணுகுண்டு கண்டுபிடிப்பும்.. ஐன்ஸ்டீனின் பார்வையும்

இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மனிக்கு முன்னதாக அணுகுண்டை உருவாக்க அமெரிக்காவை வலியுறுத்தினார் ஐன்ஸ்டீன். அச்சமயத்தில், ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் (அணுகுண்டின் தந்தை) என்பவருடன் இணைந்து மன்ஹாட்டன் திட்டத்தில் சேர்ந்தார். இத்திட்டமானது அணுகுண்டை உருவாக்கும் நோக்கத்துடன் கூடிய ஒரு இரகசிய அரசாங்க திட்டம்.

இத்திட்டத்தில் இயற்பியல் ஆய்வாளரான என்ரிகோ ஃபெர்மி, ரிச்சர்ட் ஃபெய்ன்மேன், நீல்ஸ் மற்றும் ஐன்ஸ்டீன் கலந்துக்கொண்டனர். ஆனால் ஐன்ஸ்டீன், பின்நாளில் அணுகுண்டின் வீரியத்தை உணர்ந்து அணு ஆயுதங்களை எதிர்த்து குரல் கொடுத்தார். அமைதி, சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பணியாற்றினார். அணுவாயுதக் குறைப்புக்காக ஒரு வழக்கறிஞராகவும் மாறினார்.

(ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நினைவு தினம் இன்று)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com