”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உண்மை நிலவரம்”-தகவல்களை உடைத்து சொன்ன அமைச்சர் மா. சுப்ரமணியன்!

”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உண்மை நிலவரம்”-தகவல்களை உடைத்து சொன்ன அமைச்சர் மா. சுப்ரமணியன்!
”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உண்மை நிலவரம்”-தகவல்களை உடைத்து சொன்ன அமைச்சர் மா. சுப்ரமணியன்!

வருகிற ஏப்ரல் மாதம் தான் எய்ம்ஸ் மருத்துவமனை டெண்டர் பணிகள் துவங்கப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட சூரியம்பேட்டை பகுதியில் நேற்று காலை சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 5 பேர் தீக்காயமடைந்து சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், ”எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக 45 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள். 2019ல் பணிகளை ஒன்றிய அமைச்சர் துவக்கிவைத்து விட்டு சென்றார்கள். 222.47ஏக்கர் நிலம் அன்றைக்கே தரப்பட்டு விட்டது, அதனை சுற்றி சுற்றுசுவர் அமைத்துள்ளார்கள். இங்கு நிலம் பிரச்சனை இல்லை. நிதி பிரச்சனை தான் உள்ளது.

திமுக அரசு அமைந்த பிறகு உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிட வேண்டுமென தமிழக முதல்வர் அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்கள். 50 மாணவர்கள் சேர்க்கைக்கு மதுரை தனியார் மருத்துவக்கல்லூரி, புதுவை ஜிப்மர் அல்லது கலைக்கல்லூரியில் சேர்க்க சொன்னார்கள். ஜிப்மர் வேறு மாநிலம், கலைக் கல்லூரியிலோ, தனியார் மருத்துவக்கல்லூரியிலோ சேர்த்தால் சரியாக இருக்காது. இராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் வளாகத்தில் முதலாமாண்டு 50 மாணவர்கள் இராண்டாம் ஆண்டிற்கு சேர்த்துள்ளார்கள், முதலாம் ஆண்டுக்கு 50 மாணவர்கள் என 100 மாணவர்கள் மொத்தம் சேர்க்கப்பட்டார்கள். ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வருவது என்பது எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள் எவ்வளவு பேர் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதை பொறுத்தது.

எய்ம்ஸ் கட்டுமான பணிகளை துவங்க வலியுறுத்தி வருகிறோம். அசாம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் மதுரையில் ஆரம்பிக்கும் போதே ஆரம்பிக்கும் போதே சொன்னார்கள். ஆனால், தமிழ்நாடு எய்ம்ஸ் தவிர மற்றவற்றிக்கு நிதி ஒதுக்குகிறார்கள். ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை இன்று பயன்பாட்டில் உள்ளது. மதுரை எய்ம்ஸ் ஜப்பான் நிதி உதவியுடன் பணிகள் நடைபெறும் என தெரிவித்து விட்டார்கள்.” என்றார். 

எப்போது பணி துவங்கும் என்று கேட்டோம். 2024 இறுதியில் தான் மதுரை எய்ம்ஸ் பணிகள் துவங்கும், 2028ல் தான் நிறைவு பெறும் என்றார்கள். இது தான் மதுரை எய்ம்ஸ் உண்மை நிலவரம்” என்றார்.

மேலும் அவர் புற்றுநோய் சிகிச்சை குறித்து பேசுகையில், “உலகளவில் புற்று நோய் பாதிப்பு அச்சுறுத்தலான ஒன்று தான். புற்று நோய் பாதிப்பு சுற்றுசூழல், புகையிலையினால் வருகிறது. 70-80ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஜப்பானில் புற்று நோய் தொடர்பான அமர்வில் கலந்துக்கொண்டோம் அங்குள்ள நகரில் புற்று நோய் பரிசோதனை, சிகிச்சைக்குறித்து 15அமர்வுகளில் 3 நாட்கள் தொடர்ச்சியாக பேசினோம். அதில் பல்வேறு விஷயங்கள் கண்டறியப்பட்டுள்ளது. முதல்வர் அவர்களிடம் பேசி ஜப்பானுக்கு அனுப்பி அங்குள்ள அட்வான்ஸ் சிகிச்சை முறையை கண்டறிய அனுப்பவுள்ளோம் புற்று நோய் தொடர்பானவற்றை கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார். 

மேலும், “தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பான கேள்விகளுக்கு மத்திய அரசிடம் இருந்து மிகவிரைவில் பதில் அனுப்பப்படும். அகில இந்திய கோட்டாவில் 6 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளது இது தொடர்பாக எழுத்து பூர்வமாகவும் நேரில் சந்தித்து கோரினோம் பதில் இன்னும் வரவில்லை “  என்றும் தெரிவித்தார்.

முன்னதாக சிலிண்டர் விபத்து குறித்து பேசுகையில், "நேற்று காலை 10மணிக்கு திவான் பாசியம் தெருவில் ஒரு வீட்டில் உணவு சமைத்து ஆதரவர்றோருக்கு கொடுக்கும் பணி செய்த 5 பேர் ( 3ஆண்கள் 2பெண்கள்) சிலிண்டர் வெடித்து தீக்காயமுற்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெறுகிறார்கள். இதில் 2 பேருக்கு 70% பாதிப்பு, 2 பேருக்கு 40% பாதிப்பு, ஒருவருக்கு 32% பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

70% பாதிப்புள்ளவர்களளுக்கு இணை நோய் பாதிப்பு உள்ளது. எனவே அதி தீவிர கவனம் செலுத்தி மருத்துவர்கள் பார்த்து வருகிறார்கள். அவர்களை நேரில் சந்தித்து விசாரித்து ஆறுதல் தெரிவித்தோம். தீ விபத்து என்பது சிலிண்டர் வெடித்து நடந்துள்ளது, காவல்துறை இது குறித்து விசாரித்து வருகிறார்கள்..
எந்த நிறுவனத்தில் சிலிண்டர் பெறப்பட்டது முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com