"அனைத்து அணிகளும் சேர்ந்தாலும் அதிமுக வெற்றிபெற வாய்ப்பே இல்லை" - பண்ருட்டி ராமச்சந்திரன்

"அனைத்து அணிகளும் சேர்ந்தாலும் அதிமுக வெற்றிபெற வாய்ப்பே இல்லை" - பண்ருட்டி ராமச்சந்திரன்
"அனைத்து அணிகளும் சேர்ந்தாலும் அதிமுக வெற்றிபெற வாய்ப்பே இல்லை" - பண்ருட்டி ராமச்சந்திரன்

அதிமுக-வுக்கு இனி வீழ்ச்சிதான். அனைத்து அணிகளும் ஒன்றிணைந்தாலும் அதிமுக வெற்றிபெற வாய்ப்பே இல்லை என முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

புதிய தலைமுறை அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான பண்ருட்டி ராமச்சந்திரனிடம் நெறியாளர் கார்த்திகேயன் கேட்ட சில கேள்விகளும் பதிலும்...

கேள்வி: ஓன்றிரண்டு தேர்தல் முடிவுகளை வைத்து அதிமுக தோல்விக் காரணம் இபிஎஸ் தான் என சொல்ல முடியுமா?

புதில்: 130, 140 தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக கீழே வந்திருக்கு. அது. ஜெயித்ததாக அர்த்தமா. தேர்தலை நாம் வழிநடத்திச் சென்று தொடர்ந்து தோல்விகளை சந்திக்கின்ற போது, சரி நமக்கு இது ஒத்துவராது யாராவது நடத்துங்கப்பா நான் கூட இருக்குறேன் அப்படீன்னு இபிஎஸ் சொன்னா கட்சிக்கு நல்லது.

கேள்வி: 10 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பிறகும் கூட்டணியோடு 75 இடங்களை இபிஎஸ் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இப்போது மீண்டும் இபிஎஸ்-க்கு வாய்ப்பு கொடுக்காமல் வேறொருவருக்கு கொடுங்கள் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்?

புதில்: ஏங்க... நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல் என 3 முறை வாய்ப்பு கொடுத்தாச்சே. நீங்கள் ஒரு தேர்தலை மட்டும் பேசிக்கொண்டு இருக்கீங்க. போகிறபோது தடுக்கிறது என்றால் தானே விழுந்துவிடுவோம். ஆனால், ஒரு கட்டடம் சரிகிறது என்றால் கொஞ்சம் கொஞ்சமாதான் சரியும். அதிமுகவில் சரிவு ஏற்பட்டுவிட்டது. அடுத்தது வீழ்ச்சிதான்.

கேள்வி: எடப்பாடி தலைமையில் அடுத்த தேர்தலை சந்தித்தால் அதிமுக தோல்வியடைந்து விடுமா? அதற்கு முன்பாக இவர்கள் இணைய வேண்டுமா?

புதில்: அதிமுக சுத்தமா அவுட் ஆகும். எனக்கு அதுல சந்தேகமே கிடையாது. ஓட்டு கேட்கவே இவங்க போகமுடியாது. இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில், அதிமுகவின் அனைத்து அணிகளும் சேர்ந்தாலும் கூட வெற்றிபெறுவதற்கான வாய்ப்பில்லை. நீங்கள் மறுபடியும் மக்களின் நல்லெண்ணத்தை பெறுவதற்காக திட்டங்களை வகுத்து செயல்பட்டால்தான் எதிர் காலத்தில் வெற்றிபெற முடியுமே தவிர இல்லையென்றால் முடியாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com