'இதெல்லாம் ஒரு கேள்வியா என வினவியது ஏன்?' - பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில் வளர்மதி விளக்கம்

'இதெல்லாம் ஒரு கேள்வியா என வினவியது ஏன்?' - பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில் வளர்மதி விளக்கம்
'இதெல்லாம் ஒரு கேள்வியா என வினவியது ஏன்?' - பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில் வளர்மதி விளக்கம்

பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள பிஸ்பிபி பள்ளி குறித்த கேள்விக்கு  “இதெல்லாம் ஒரு கேள்வியா?” என்று கேட்டு அதிரவைத்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி. இப்படி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செய்தியாளர் சந்திப்பின்போது  சலசலப்பை ஏற்படுத்திய வளர்மதியிடம், அதே பிஎஸ்பிபி பள்ளி சர்ச்சை குறித்த கேள்வியைக் கேட்டோம்,

  “பிஸ்பிபி பள்ளி குறித்து என்னிடம் கேள்வி கேட்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவரிடம்தான் கேட்டார்கள். கொரோனாவல் மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். நாட்டில் பசி, பட்டினி நிலவுகிறது. இந்த சூழலில் அரசியல் சம்பந்தமாகவோ, கொரோனா நடவடிக்கைகள் குறித்தோ கேள்வி கேட்கலாம். அதில், தவறில்லை. அதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் பதிலளித்தார். ஆனால், பிஎஸ்பிபி பள்ளி குறித்து கேட்டார்கள். அங்கு நானும் இருந்ததால் ’இதெல்லாம் ஒரு கேள்வியா?’ என்று கேட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது? நான் சொன்ன அந்த ஒரு வார்த்தையை மட்டும் திரித்து வெளியிட்டுவிட்டார்கள். அதற்கு அடுத்த வார்த்தையான, ‘அதான் அந்த ஆசிரியர் ஜெயிலுக்குப் போய்ட்டாரே’ என்பதை மட்டும் கட் பண்ணிட்டாங்க.

பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் அப்படி நடந்துகொண்டதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்துவிட்டப்பிறகு, அதுகுறித்து ஏன் கருத்து சொல்லவேண்டும். எப்படி சொல்ல முடியும்? யாரும் சொல்ல மாட்டார்கள். இந்த நாட்டுல கொரோனா எப்படி இருக்குன்னு கேளுங்க. அதுதான் நாட்டு நிலவரம், தனிப்பட்ட ஒரு ஆசிரியர் தவறு செய்ததற்கு நடவடிக்கை எடுத்தப்பிறகும் அதில், கருத்து சொல்ல என்ன இருக்கு? அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் கருத்து சொல்லலாம். அந்த  ஆசிரியரை பிடித்து ஜெயிலில் போட்டாச்சு. பள்ளி நிர்வாகத்தை விசாரிக்கிறார்கள். தொடர்ச்சியாக பாலியல் புகாரில் சிக்கியவர்களை பிடித்து ஜெயிலில் போட்டுக்கொண்டேதான் வருகிறார்கள்”.

நீங்கள் ஒரு பெண்… பெரியார் விருதெல்லாம் வாங்கினீர்களே? பிஎஸ்பிபி பள்ளி சர்ச்சை குறித்து உங்க கருத்து என்ன?

   “ஒரு ஆசிரியர் இப்படியொரு கொடூர செயலில் ஈடுபட்டதை யார் ஏற்றுக்கொள்வார்கள்? பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் அப்படி செய்தது வன்மையாக கண்டிக்க வேண்டிய விஷயம். இதனை, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரிய பள்ளியாக இருந்தாலும் சிறிய பள்ளிகளாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கவேண்டும். விடக்கூடாது. இன்னும்கூட கடுமையாய் தண்டிக்கவேண்டும். அம்மா இருக்கும்போது பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு 13 விதமான தண்டனை கொடுக்கணும்னு சொன்னாங்க. பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது அம்மா கடுமையான நடவடிக்கையும் எடுத்தார்கள்”.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com