அதிமுகவை ‘அமித்ஷா திமுக’ என மாற்றிக்கொள்ளலாம்: ஓபிஎஸ்ஸின் ‘ஒன்றிய’ அறிக்கைக்கு திமுக பதில்

அதிமுகவை ‘அமித்ஷா திமுக’ என மாற்றிக்கொள்ளலாம்: ஓபிஎஸ்ஸின் ‘ஒன்றிய’ அறிக்கைக்கு திமுக பதில்
அதிமுகவை ‘அமித்ஷா திமுக’ என மாற்றிக்கொள்ளலாம்: ஓபிஎஸ்ஸின் ‘ஒன்றிய’ அறிக்கைக்கு திமுக பதில்

திமுக அரசு இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்ற ஓபிஎஸ்ஸின் அறிக்கைக்கு பதிலளித்துள்ள திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி “ அண்ணா திமுக என்ற கட்சியின் பெயரை அமித்ஷா திமுக என மாற்றிக்கொள்ளலாம்’ என தெரிவித்திருக்கிறார்.

திமுக அரசு இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல. இந்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதேபோல, ஜெய் ஹிந்த் என்ற சொல் ஆளுநர் உரையில் இடம்பெறாததால், தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்ற பேரவை உறுப்பினர் ஈஸ்வரனின் வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ஓபிஎஸ்ஸின் இந்த அறிக்கை தற்போது சர்ச்சையாகியிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கை குறித்து, ‘புதிய தலைமுறை’யிடம் பேசிய  திமுகவின் செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி, “ஒன்றியம் என்ற வார்த்தையை எந்த இடத்திலும் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்வதற்காக நாங்கள் பயன்படுத்தவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இரண்டு இறையாண்மை கொண்ட அரசுகள் உள்ளன. ஒன்று ஒன்றிய அரசு, மற்றொன்று மாநில அரசு. ஒருவேளை ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ள ராணுவம் தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றினால் அது இந்திய அரசின் இறையாண்மைக்கு எதிரானதாகும். அதுபோல, மாநில அரசின் பட்டியலில் உள்ள வேளாண்மைக்கு எதிராக ஒன்றிய அரசு சட்டம் இயற்றுவது மாநில இறையாண்மைக்கு எதிரானதுதானே, அதைத்தான் நாங்கள் பேசுகிறோம்.

500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாகவும், பலரின் ஆளுகைக்கு கீழும் இருந்த பகுதிகளை ஒன்றிணைத்ததே கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில்தான். அதனால்தான் கவனமாக யூனியன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவும் யூனியன்தான், இந்தியாவும் யூனியன் தான். அமெரிக்காவில் உள்ள மாநிலங்களுக்கு உரிமைகள் அதிகம். அதுபோல இந்தியாவிலும் மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

அதிமுகவின் ஆதரவுடன் இருக்கும் பாஜக அரசு மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுகிறது, இத்தகைய போக்கு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அனைத்து அதிகாரங்களும் தங்களிடம் குவிந்திருக்க வேண்டும் என்பதே ஒன்றிய பாஜக அரசின் விருப்பமாக உள்ளது. அப்படியானால் மாநில அரசின் இறையாண்மைக்கு எதிராக ஒன்றிய அரசு சட்டம் இயற்றலாம் என்பதை அதிமுக ஏற்றுக்கொள்கிறது என்பதையே ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அறிக்கை காட்டுகிறது. அதனால் இனி அவர்கள், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதற்கு பதிலாக, அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகம் என கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ளலாம். மாநில அரசு, ஒன்றிய அரசு பற்றிய புரிதலே இல்லாமல் ஓபிஎஸ் எப்படி தமிழ்நாட்டின் முதல்வராக, நிதியமைச்சராக எல்லாம் இத்தனை காலம் பணியாற்றினார் என்ற கேள்வி எழுகிறது. இத்தகைய மனநிலை உள்ள இவர்கள் எப்படி மாநில உரிமைக்கு குரல் கொடுத்திருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இதனால்தான் எந்த கேள்வியும் கேட்காமல் ஜிஎஸ்டி உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களை அதிமுக அரசு அனுமதித்துள்ளது.

ஒன்றியம் என்று சொல்வது இந்திய அரசை சிறுமைப்படுத்தும் செயல் என ஓபிஎஸ் சொல்கிறார். இது சிறுமைப்படுத்தும் செயல் அல்ல. மாறாக மாநில அரசின் உரிமைகளை கொடுங்கள் என்றே நாம் கேட்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு சொல்லும் மிகமிக கவனமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அரசியலமைப்பு சட்டம் பயன்படுத்திய ஒன்றியம் என்ற சொல்லைத்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம். அரசியலமைப்பு சட்டம் பற்றிய எந்த புரிதலும் இல்லாத அரைகுறை அறிவுடன் இவர் எப்படி இத்தனைகாலம் அமைச்சராக இருந்தார் என தெரியவில்லை, அவர் முதலில் அரசியலமைப்பு சட்டத்தை நன்றாக படிக்கவேண்டும். அதன்பின்னர் பேசவேண்டும்.

இந்திய அரசியலமைப்பின்படி உரிமைகள் பட்டியல் மூன்றாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய பட்டியல், மாநில பட்டியல், ஒத்திசைவு பட்டியல் என்ற அந்த மூன்று பட்டியலில் ஒன்றிய பட்டியலில் உள்ள உரிமைகளை எங்களுக்கு தாருங்கள் என நாங்கள் கேட்கவில்லை. கல்வி, வேளாண்மை, ரேஷன் பொருள்கள், ஒடுக்கப்பட்டோர் நலன் என மாநில உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிட வேண்டாம் என்றே கேட்கிறோம். இதனடிப்படையில் மாநிலங்களின் உரிமையை மீட்க வேண்டும் என்றே நாங்கள் தொடர்ந்து குரல்கொடுக்கிறோம். ஆனால் இதுபற்றிய எந்த புரிதலும் இன்றி கோமாளித்தனமான அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கிறார். இத்தகைய புரிதலுடன்தான் இவர்கள் ஆட்சியில் இருந்தார்கள் என்பது வெட்கக்கேடானது.

அதுபோல, ஜெய்ஹிந்த் என்பது சுதந்திர காலத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைதான், ஆனால் அதனை இந்துத்துவ வார்த்தையாக மாற்றிவிட்டார்கள் என்பதனால்தான் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அத்தகைய கருத்தை தெரிவித்தார். அது அவரின் தனிப்பட்ட கருத்துதான், திமுகவின் கருத்து அல்ல. நாங்கள் வாழ்க பாரதம், வாழ்க இந்தியா என்றுதான் சொல்கிறோம். இந்திய இறையாண்மையை மதிக்கிறோம். ஜெய்ஹிந்த் என்று சொன்னால்தான் நாட்டுபற்று என சொல்வது தவறான வாதம். அதனால் ஈஸ்வரனின் கருத்தை சட்டமன்ற குறிப்பிலிருந்து நீக்கவேண்டிய தேவையில்லை. அரசியலமைப்பு சட்டத்தில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையோ, வந்தேமாதரம் என்ற வார்த்தையோ இடம்பெறவில்லை என்ற வரலாறையும் ஓபிஎஸ் தெரிந்துகொள்ளவேண்டும். தற்போது நாட்டில் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுவது பாஜகவும், அதிமுகவும்தான். அவர்கள்தான் அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் நாட்டின் பன்முகத்தன்மை, அனைவருக்கும் கல்வி, சமத்துவம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இருக்கிறார்கள். நாங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், மாநில உரிமைகளை மேம்படுத்தவும் போராடுகிறோம்” என தெரிவித்திருக்கிறார்     

முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com